Posted by S Peer Mohamed
(peer) on 11/21/2012
|
|||
ஜமாத்துல் உலமா மாத இதழின் ஆசிரியரும்,நாடறிந்த மார்க்க மேதையுமான மறைந்த மௌலானா மௌலவி அபுல் ஹசன் சாதுலி அவர்களின் மகனுமான மார்க்க அறிஞர் அல்ஹாஜ் மௌலானா மௌலவி எம்.எ.முகம்மது இபுராஹீம் பாக்கவி ஹசரத் தமது ஐம்பத்து ஆறாவது வயதில் 20.11.12 அன்று காலை நான்கு மணி அளவில் காலமானார். இன்னா லில்லாஹி வ இன்னா இல்லிஹி ராஜிவூன். மௌலானா அவர்கள் நேற்றைய முன்தினத்தில் மூளையில் ஏற்பட்ட பாதிப்பால் நெல்லை ஷிபா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்கள். உணர்வு திரும்பாத நிலையில் இன்று காலை நான்கு அளவில் மறைந்தார்கள். அன்னாருக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் நமதூர் அப்துர் ரஹ்மான் சாரின் மகளைக் கட்டிய மருமகனாவார். நெல்லையில் முன்னேற்றம் புக் டிப்போ மூலம் ஜமாஅத்துல் உலமா மாத இதழும்,மார்க்க நூல்களும்,இஸ்லாமிய பிரசுரங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகைப் பற்றி பல்வேறு நூல்களும் வெளியிட்டு பணிபுரிந்தவர். அனைத்துத் தரப்பினராலும் மிக மென்மையானவர் என கூறப்படும் அன்னாரின் பணிகளை இறைவன் பொருந்தி அவர்களுக்கு மறுமையில் உயர்ந்த பதவியைத் தர துஆ செய்வோமாக.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |