Posted by S Peer Mohamed
(peer) on 11/25/2012
|
|||
ஏர்வாடி பேரூராட்சி தலைவர் ஆசாத் அவர்களை தொடர்பு கொண்டபோது, பாலம் வேலை தற்போது விரைவாக நடைபெறுவதாகவும், அந்த ஒப்பந்ததாரர் தற்போது ஏர்வாடியில் தங்கியிருந்து வேலைகளை கவனித்து வருவதாகவும் சொன்னார். Pillar வேலைகள் நடைபெறுவதாகவும் அது முடிந்த பின் மற்ற வேலைகள் விரைவாக முடிவடைந்து விடும் என்றும் இன்ஷா அல்லாஹ் இன்னும் இரண்டு மாதங்களில் முழுமையாக முடிந்து விடும் என்றார்கள். ஏர்வாடியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நிலவுகிறது. இதற்காக கப்பீஸ் எனப்படும் மீன் வகைகளை வாங்கி சாக்கடைகளில் விட்டால் அந்த மீன்கள் டெங்கினை பரப்பும் கொசுவின் முட்டைகளை சாப்பிட்டு அந்த கொசுவினை அழித்து விடுகின்றன. இன்று 500 கப்பீஸ் மீன்கள் சென்னையிலிருந்து கொண்டு வரப்பட்டு விடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்கள். மேலும் அதிகமாக கொண்டு வரவேண்டும் என்றும் இதற்காக பொருளாதார உதவிகள் செய்பவர்கள் செய்யலாம்.. அதுபோல் நிலவேம்புக் கஷாயம் ஏறத்தாழ 2000 பேருக்கு வரும் சனி முதல் திங்கள் வரை வழங்கப்பட உள்ளது. இதுவும் டெங்கினைத் தடுப்பதற்காக வழங்கப்படுகிறது. மீன் மற்றும் கஷாயத்திற்காக ஏறத்தாழ ரூ 75000 எதிர்பார்க்கப்படுகிறது. உதவி செய்ய விரும்புபவர்கள் சகோதரர் ஆசாத் ( உள்நாடு: 00919443970705) அவர்களையோ அல்லது சகோதரர் உவைஸ் (வெளிநாட்ய்: 00971 55 5590487) தொடர்பு கொள்ளவும். - உவைஸ். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |