Posted by Haja Mohideen
(Hajas) on 11/28/2012
|
|||
பாளையங்கோட்டையில் 2 இடங்களில் இலவச லேப்–டாப் கேட்டு மாணவர்கள் திடீர் போராட்டம் பதிவு செய்த நாள் : Nov 28 | 06:34 pm
நெல்லை பாளையங்கோட்டையில் இலவச லேப்–டாப் கம்ப்யூட்டர் கேட்டு மாணவர்கள் 2 இடங்களில் திடீர் போராட்டங்களில் ஈடுபட்டனர். லேப்– டாப் கம்யூட்டர் பாளையங்கோட்டை சேவியர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை தமிழக அரசின் இலவச லேப்–டாப் கம்ப்யூட்டர் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கடந்த ஆண்டு பிளஸ்–2 படிப்பை முடித்த மாணவர்களுக்கு லேப்–டாப் கம்யூட்டர்கள் வழங்கப்பட்டன. அதில் 52 பேருக்கு மட்டும் கம்ப்யூட்டர் வழங்கப்படவில்லை. இதுபற்றி அந்த மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து கேட்டனர். திடீர் மறியல் அப்போது 52 மாணவர்களும் கடந்த ஆண்டு சுயநிதி பாடப்பிரிவில் படித்ததாகவும், அதனால் லேப்–டாப் வழங்க அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை என்றும் பதில் அளித்தனர். ஆனால் மாணவர்கள் தரப்பில் இதை கண்டித்து பள்ளிக்கூடம் முன்பு உள்ள மெயின் ரோட்டில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேசி மறியலை கைவிடச் செய்தனர். கல்வி அலுவலகம் முற்றுகை இதே போல் இலவச லேப்–டாப் கம்யூட்டர் வழங்க கோரி கடந்த ஆண்டு பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி மற்றும் பாளையங்கோட்டை சாராள் தக்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகள் நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘‘நாங்கள் கடந்த கல்விஆண்டில் பிளஸ்–2 படித்தோம். கடந்த ஆண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இலவச மடிக்கணினி ஒதுக்கீடு செய்யப்பட்டும் எங்களை போன்ற மாணவர்கள் சுயநிதி பிரிவில் படித்தார்கள் என்று கூறி லேப் டாப் கம்ப்யூட்டர் தரமறுக்கின்றனர். பள்ளிக்கூடத்தில் சுயநிதி பாடப்பிரிவு என்று எதுவும் கிடையாது. எனவே பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் கம்ப்யூட்டர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டு உள்ளது.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |