ஏர்வாடியில் 9 ஆயிரம் பேருக்கு இலவச நிலவேம்பு கசாய குடிநீர்
டிசம்பர் 06,2012,02:52 IST
களக்காடு:ஏர்வாடியில் இலவச நிலவேம்பு கசாய குடிநீர் வழங்கும் முகாம் நிறைவு பெற்றது. ஏர்வாடியில் மதினா சித்த பாரம்பரிய வைத்தியசாலை மூலம் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நிலவேம்பு கசாய குடிநீர் வழங்கும் முகாம் கடந்த 26ம் தேதி துவங்கியது. தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மக்களுக்கு நிலவேம்பு கசாய குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டது. ஒவ்வொரு வீடு வீடாக சென்று நிலவேம்பு கசாய குடிநீர் வழங்கப்பட்டது. இம்முகாம் நேற்று நிறைவு பெற்றது. இதுகுறித்து வைத்தியசாலை டாக்டர் ஜமீல் அகமது கூறிய போது, ""ஏர்வாடியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒருவர் இறந்தார். இதனால் மக்கள் மத்தியில் டெங்கு காய்ச்சல் குறித்து பீதி நிலவியது. கடந்த 10 நாட்களாக டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நிலவேம்பு கசாய குடிநீரை 9 ஆயிரம் பேருக்கு வழங்கியுள்ளோம். நிலவேம்பு கசாய குடிநீர் குடித்தால் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தலாம்'' என்றார். நிறைவு விழாவில் ஐக்கிய பொது ஜமாஅத் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
http://www.dinamalar.com/district_detail.asp?id=600400
|