Posted by S Peer Mohamed
(peer) on 1/9/2013
|
|||
அஸ்ஸலாமு அலைக்கும்
வள்ளியூர் அருகில் உள்ள ராதாபுரத்தை சார்ந்த நியாஸ் என்ற சகோதரரின் இரண்டாவது குழந்தை இஸ்மாயீல் பிறக்கும் போது மூழை யின் சிறிய பாகம் வெளியில் தெரிந்த நிலையில் இருந்தது அதை ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் ஆபரேசன் செய்து சரி செய்தாகி விட்டது இதற்க்கு ஆன செலவில் 20,000/- ரூபாய் நமதூரின் மருத்துவ உதவி அமைப்பு செய்திருந்தது நானும் நேரில் சென்று பார்த்தேன் 3 மாதமே ஆன குழந்தையின் தலையில் 7 தையல் களுடன் பரிதாபமாக இருந்தது இந்நிலையில் மூச்சு விட சிறமமிருப்பதை பரிசோதித்த போது இதயத்திலும் இரண்டு துளை கள் கண்டுபிடிக்கபட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை யில் ஆபரேசனுக்காக 1,00,000/- ஆகும் செலவில் உறிய வருமாண சான்றுகளை கொடுத்து ரூ 40,000/- மட்டுமே நாளை மதியத்திற்க்குள் கட்ட வேண்டிய சூழலில் இருக்கிறார் 10,000/- ரூபாய் கையில் இருப்பதாகவும் மீதம் 30,000/- க்கு நம்மை போன்றோரின் உதவியை நாடியுள்ளார்
நாளை யே கட்ட வேண்டி இருப்பதால் யாரேனும் முதலில் கொடுத்துதவி பின்னர் கலெக்ட் செய்து கொள்ளலாமே அல்லாஹ்விற்க்காக இந்த உதவியை செய்து 3 மாதமே ஆன இந்த பச்சிளம் குழந்தைக்கு நிவாரணம் கிடைக்க நமது முயற்ச்சியை செய்வோம் இன்ஷா அல்லாஹ் வல்ல ரஹ்மான் அருள் செய்வானாக
குழந்தையின் தந்தை நமதூர் ஹிஸ்னுல் உலூம் மதரசாவின் முன்னால் மாணவர் வண்டியில் துனிமனி கள் விற்க்கும் தொழில் செய்கிறார்
அவரின் செல் : +91 8344-583208
இந்த குழந்தைக்காக அதிகம் உதவிகளோடு துஆ வும் செய்வோம் பணத்திற்க்கும் தங்களாலான முயற்ச்சியை செய்யவும்
ஜஸாக்குமுல்லாஹ் - அல்தாஃப்
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |