2013 ல் உலகம் அழியபோகிறதா?

Posted by Sheik Mohideen.m (mbsheik143) on 1/11/2013


புலி வருது..புலி வருது கதை எல்லோருக்கும் தெரியும் தானே?அதுதான் இது....

நான் சின்னபிள்ளையாக இருக்கும்போதே நடந்துகொண்டிருக்கும் மாயத்தீவு கதை இது...

சூரியனுக்கு பாதி வயதாகிவிட்டது என்பது உண்மை...ஓசோன் மண்டலத்தில் ஓட்டை விழுந்தது உண்மை...அதிக வெப்பத்தால் பனி உருகி கடல் நீர்மட்டம் உயர்ந்து கொண்டிருப்பது உண்மை...ஆனால் இந்த அழியப்போகிறது..அதோ அழியப்போகிறது என்பது(வாரான் வாரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே) க்ரீன் பொய்.
 தனக்கு தாலாட்ட தொட்டில் கட்டிய பூமிக்கு மனிதர்கள் கற்பனையாக கல்லறை கட்ட ஆசை படுகிறார்கள்!

ஏதோ மாயன் காலண்டராம்!அப்படி இப்படி என நிலாபாட்டி கதை சொல்கிறார்கள்(நிலாவை இப்போது பார்த்தாலும் அதன் கறை பாட்டியாகத்தான் நினைவுக்கு வருகிறது...காலக்கொடுமைய பாருங்க சார்!)



காமாலை உள்ளவனுக்கு கண்டதெல்லாம் மஞ்சளாகத்தெரியுமாம்...

சுனாமி,பூகம்பம் இவற்றை கண்டு இவர்களுக்கு லூஸ்(loose)மோசன் போய்விட்டதோ என்னவோ?





இதுல ஒரு பெரிய கொடுமை என்னவென்றால் உலகம் அழிந்து மூன்றுநாள் கழித்துதான் ஆஸ்ட்ரேலியா அழியுமாம்(இது எப்படி இருக்கு?)

உலகத்தோட நாட்டாமை என உளறி கொண்டிருக்கும் நாசாமா போன நாசாவே!

உங்க கைய காலா நினைச்சி கேட்கிறேன்(காலவாரி விடத்தான்)

நீங்க பொய் சொல்றத எப்ப ஸ்டாப் பண்ண போறிங்க?ப்ளீஸ்....

உங்களை  நம்பி உலகம் அழியப்போகுது என்கிற பயத்தில்....

கடைசி தூக்குத்தண்டனைகைதி ஆசையில் எங்கள் நாட்டு அறியாத பெண்களும் ஆண்களும் புத்தாடை உடுத்தி,இறைச்சி எடுத்து சாப்பிட்டு,இருக்கிற நகைகள் அணிந்து..............

இன்னும்செய்த காமெடி ஏராளம்..ஏராளாம்






"மாயாக்களின் கண்டுபிடிப்புகள் பல. அவற்றில் குறிப்பிடத்தக்கது வான்கணித முறைகள். அவற்றின் அடிப்படையில் உருவானதே மாயக்களின் நாட்காட்டி. மாயாக்களின் நாட்காட்டி இரகசியம் மிகுந்ததா? “இல்லை, அது விளங்காத ஒன்று” என்றே பலரும் சொல்வார்கள்.

புரியாத ஒன்றை வைத்து பல குளறுபடிகள் செய்கிறார்கள், கணிப்புகள் செய்கிறார்கள், இறுதியில் ஏதோ ஒரு முடிவு கட்டி இது தான் அது என சொல்லிவிடுகிறார்கள், எல்லாம் பிசகு, பொய் புரட்டு நிறைந்து கிடக்கிறது, என சிலர் அவற்றை ஒதுக்கி வைத்துவிடுவார்கள். சில பழமை நிகழ்வுக்கான காரணங்களைக் கண்டறிவதும் ஒரு சுகம் தான்."




"மாயாக்களின் நாள்காட்டியில் ஒரு விசித்திரத்தைக் கண்டார்கள் ஆய்வாளர்கள். அந்த நாள்காட்டி 21 டிசம்பர் 2012-ஆம் ஆண்டு நிறைவடைகிறது. கி.மு 3113-ஆம் ஆண்டு அந்நாள்காட்டி தொடக்க ஆண்டாக அமைகிறது. இது முழுமை பெறாத நாள்காட்டியா? அல்லது மாயாக்களின் மறுபட்ட கணிப்பு முறையில் கண்டறியப்பட்டவையா?

அது என்ன மாயாக்களின் கணக்கு? அவர்களின் கணித முறை இப்படி விரிகிறது.
கின், உனியல், துன், கதுன், பக்துன், பிக்துன், கலப்துன்.

நாள் என்பதை அவர்கள் கின் எனக் குறிக்கிறார்கள்.
19 கின் (19 நாள்)= 1 உனியல்
359 நாள் = 1 துன்
7200 நாள் = 1 கதுன்
144 002 நாள் = 1 பக்துன்
1 872 025 நாள் = 13 பக்துன்
2 880 025 நாள் = 1 பிக்துன்
57 600 025 நாள் = 1 கலப்துன்

இந்த கணக்கியல் முறை இப்படி வியப்பளிப்பதாக இருக்கலாம். மாயாக்களின் நாள்காட்டி இயற்கை மாற்றங்கள் மற்றும் சீற்றங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. இவையாவும் இரு முக்கிய புத்தகங்களில் குறிக்கப்பட்டுள்ளது. அப்புத்தகங்கள் ‘கொடெக்ஸ்’ என அழைக்கப்படுகிறது. கொடெக்ஸ் பூமியை மட்டுமன்றி கோள் மாற்றங்களின் குறிப்புகளும் உள்ளடங்கியது. கோடெக்ஸ் வான் நிபுண மாயாக்களால் எழுதப்பட்டதாக அறியமுடிகிறது.

மாயா வகுப்பை சேர்ந்த வான் நிபுணர்கள் மாய மந்திர வேலைகள் கைதேர்ந்தவர்கள். அப்படியானால் இந்நாள்காட்டியின் நம்பகத்தன்மை எவ்வகையது எனும் கேள்வி நம்முள் எழுவது சாத்தியமாகிறது. ஆரம்ப கால வாழ்க்கையில் மனிதன் ஏதோ ஒரு வகையில் இயற்கையை சார்ந்தே வாழ்ந்திருக்கிறான். ஆதாலால் இயற்கையை போற்றும் வண்ணம் இம்மாதிரியான மாய மந்திர வேலைகள் ஏற்பட்டிருக்கலாம்.



கோடெக்ஸ், கணிதமும் சிறு சிறு சின்னங்களும் பொறிக்கப்பட்டிருக்கும் புத்தகம். அச்சிறு சிறு எழுத்து வகைகளை ஹிரோகிலிஃப் எழுத்துகள் என அறிகிறோம். அந்த எழுத்துகள் எப்படி அமைந்திருக்கின்றன? பூமியில் உள்ள மனிதன் ஆகாயத்தில் இருக்கும் உயிரினங்களோடு தொடர்பு கொள்வது போலும், அவர்களுடைய கடவுளர்களோடு பேசுவது போலவும் உள்ளன.

இந்நாள்காட்டி கி.மு 20 செப்டம்பர் 3113-ஆம் திகதியில் தொடங்குகிறது. இக்காலகட்டம் மாயாக்களின் காலமென அழைக்கப்படுகிறது. அவர்களின் நம்பிக்கைப்படி இவ்வுலகம் புதுபிக்கப்படும். அப்படி புதுபிக்கப்படும் நாளானது மனித சரித்திரத்தில் முக்கிய நாளாக அமையும்.

கோள்களின் இட மாற்றமும் பூமியின் கால மாற்றமும் மனித வாழ்க்கையில் ஏற்படும் நன்மை தீமைகளுக்கு பாதிப்பை விளைவிற்கின்றன என்பது இவர்களின் கருத்தாகும். பூர்வ கால எகிப்திய மக்களிடையேயும் இவ்வகை நம்பிக்கை இருப்பதை நாம் காண முடிகிறது. Asy Syi’ra நட்சத்திரம் நைல் நதியை கடக்கும் வேளையில் தீமைகள் விளையும் எனும் நம்பிக்கையை கொண்டிருந்தார்கள் அவர்கள்.

21 டிசம்பர் 2012 End of Times என ஆய்வாலர்களாலும் அறிஞர்களாலும் குறிப்பிடபடுகிறது. இந்த End of Times எனும் சொல்லுக்காகன விவாதங்கள் இன்னமும் மள்ளுக்கட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. எடுத்த எடுப்பில் அதுதான் பூமியின் இறுதி நாள் என சொல்லிவிடுவோர் பலர் உண்டு. ஆனால் ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர்களின் பார்வையில் அச்செற்களுக்கான ஆய்வுகள் ஆழமானவை. அவற்றில் வேடிக்கையான சில சேதிகளும் உண்டு.



பூமி சுற்றுவது நின்றுவிடும் ( கால நேர மாற்றம் இருக்காது), காலம் Pisces எனப்படும் மீனத்தில் ஒரு சுற்று முடிந்து Aquarius எனப்படும் மேஷத்தில் ஆரம்பமாகப் போகும் நாள், உலகம் வெள்ளி நூற்றாண்டில் இருந்து தங்க நூற்றாண்டிற்கு மாற்றம் காண்கிறது, அதீதமான இயற்கைச் சீற்றம் ஏற்பட்டு உலகில் மாற்றங்கள் உறுவாகும், உலகைக் காக்க கடவுளர் எழும் நாள், காலம் பின்நோக்கி நகரும், வேற்றுக் கிரக வாசிகளோடு தொடர்பு உண்டாகும் நாள்.

அத்திகதியை பற்றிய மேற்காணும் விடயங்கள் நகைப்புக்குறியவை. தமிழில் செலுத்தப்பட்ட ஆரிய கதைகளைப் போலவே மனிதர்களின் மனதில் மடத்தனத்தை உட்புகுத்துபவை.

இன்று எழுதப்படுபவனவற்றில் சில வேளைகளில் உண்மைகள் கேள்விக்குறியானதாக இருக்கிறது. 1999-ஆம் ஆண்டு முடிந்தவுடன் உலகத்தின் கதி முடிவடையும் என நாஸ்ட்ராடாமஸ் குறிப்பிட்டதாக ஒரு புத்தகத்தில் எழுதியுள்ளார்கள். ஆனால் இன்றோ ஆண்டு 2009 ஆகிவிட்டது. நாஸ்ட்ராடாமஸ் சொன்னது பொய்யா இல்லை புத்தகத்தில் எழுதிய விடயம் பொய்யா?

உலக சரித்திரத்தின் அடிப்படையில் மாயாக்கள் மாய மந்திர வேலைகளில் கைதேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடபடுகிறது. திறமையான சிந்தனை வளத்தினால் அருமையான நாகரிகத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அதைப் போலவே அவர்களின் நாட்காட்டியும் முழுமையான நிலையில் கணிக்கப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது.

இந்த மாயாக்களின் ஒரு பிரிவினர் தென் மெக்சிக்கோவின் Guetmala, Belize மற்றும் Honduras போன்ற பகுதிகளில் வாழ்ந்திருப்பதாக குறிப்பிடப்படுகிறது. பூர்வகால கட்டிடங்களும், பிரமீடுகளும், மற்றும் கோவில்களும் இங்கு இருக்கிறது.

1517-ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் படையெடுப்பின் போது மாயாக்களின் கலை மற்றும் இதர தொழில்நுட்ப வேலைப்பாடுகள் பலவும் பரவலாக அழிந்து போனது. அவற்றில் முக்கியமாக மாயாக்களின் நூலகமும் அழிந்தது. அவ்வகையில் காண்போம் என்றால் இந்த நாட்காட்டியிலும் பிசகு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.

Dr. Jose Argulles ஓர் அமேரிக்கர். அவர் சரித்திர ஆய்வாளர் ஆவார். Zhou Yi எனும் சீனக் குடியினரின் கணக்கியல் முறையும் மாயாக்களின் கணக்கியல் முறையும் ஒத்துப் போகிறது என்பது இவர் கருத்தாகும்.

1973-ஆம் ஆண்டு வெளிவந்த ‘The Mayan Factor’ எனும் தமது நூலில் பல விடயங்களை அவர் குறிப்பிட்டிருக்கிறார். தற்போதய நிலையில் இப்பிரபஞ்சத்தில் “The Great Cycle’ எனும் மாபெரும் சுழற்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிது. அதன் கால அளவு ஏறக்குறைய 5000 ஆண்டுகள் என குறிக்கப்படுகிறது. அதன் அடிப்படியில் மாயாக்களின் கி.மு 3113 முதல் கி.பி 2012 வரையிலான நாள்காட்டி அமைந்திருக்கக் கூடும் என கருத்துரைக்கிறார்.



இந்த மாபெரும் சுழற்சி முடியும் தருவாயில் உலகில் மாறுதல்கள் உண்டாகும் சாத்தியங்கள் இருப்பதாக மாயக்கள் நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்கள். இக்கணித முறை சிறு கூறுகளாக பிரிக்கப்பட்டு ஓவ்வொரு காலகட்டத்திற்கும் குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவை இருபது இருபது ஆண்டுகளாக பிறிக்கப்படுகிறது.

அக்கணித முறையின் இறுதி காலகட்டமாக கருதப்படுவது 1992 முதல் 2012 ஆண்டுகளாகும். இது மொத்தம் 20 ஆண்டுகளைக் கொண்டிருக்கிறது. இதை ‘The Earth Regenaration Period எனக் குறிப்பிடுகிறார்கள்."




 
"உலகம் 2012 இல் அழியும் என பல ஊடகங்கள் பரப்புரைப்பதிலே எந்த உண்மையும் இல்லை. சூரிய தொகுதியின் கிரகங்கள் இன்னும் நான்கு பில்லியன் வருடங்களுக்கு ஆயுள் உடையவை என கண்டறியப்பட்டுள்ளது. உலகளாவிய அளவில் எல்லா விஞ்ஞானிகளும்2012 இல் உலகத்துக்கு எந்த ஆபத்தும் இல்லை என கூறியுள்ளனர்.

 : சுமேரியர்கள் கண்டுபிடித்த நிபிறு என்கிற கோளானது பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. அந்தக் கோள் 2003 மேயில் பூமியை மோதும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்காததால் 2012 டிசம்பரில் மோதும் என எதிர்பார்த்தார்கள். மயன்களின் நாட்காட்டியின் கால எண்ணிக்கையும் 2012 டிசம்பர் 21 உடன் முடிந்துபோகவே, அதையும் இதையும் முடித்து விட்டார்கள்.
 
மாயன் கலண்டரின்  முடிவு : வீதியோர சலூனில் தொங்கவிடப்பட்டுள்ள கலண்டரும்தான் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 31 உடன் முடிகிறது. அதற்காக உலகம் என்ன, அழிந்தா விட்டது? மறுபடி ஜனவரி 1 இல தொடங்கவில்லையா? அதுபோல மாயன் கலண்டரும் அடுத்த சுற்றாக தொடங்கும்.
 
டிசம்பர் 23 முதல் 25 வரை உலகமே இருண்டுவிடுமா : நாசா சொல்லியதாக இப்படி ஒரு அறிக்கை உலாவுகிறது. நாசாவோ, வேறு எந்த நிறுவனமோ இப்படி ஒரு முன்கூறலை சொல்லவில்லை. எல்லா கிரகங்களும் பூமியை மோதுவதற்கு ஏற்றாற்போல இடமாறுவதற்காக அந்த மூன்று நாட்களும் அப்படி ஒரு சூனியம் நடைபெறும் என்பதுவும் வதந்தியே. 1962 இல் ஒரு பெரிய இடப்பெயர்வு கிரகங்களிலே ஏற்பட்டது. ஆனால் அதுகூட பூமியை பாதிக்கவில்லை. ஒவ்வொரு டிசம்பர் மாதமும் பூமியும் சூரியனும் (சூரிய தொகுதியே ) பால்வீதியின் மையத்தை நோக்கி ஒரு இடப்பெயர்வை மேற்கொள்ளுகின்றன. ஆனால், அதுவும் ஒரு வருடாந்த நிகழ்வே தவிர, எந்த பாதிப்பும் அற்றது.
 
நிபுரு கிரகம் : நிபுரு (அல்லது கோள் எக்ஸ், (planet X)  அல்லது எரிஸ்) என்று ஒரு கிரகம் பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக உள்ள கதையும் வதந்தியே. அப்படி ஒரு கிரகம் வந்து கொண்டிருப்பது உண்மை என்றால், எப்போதோ விஞ்ஞானிகள் அதை கண்டுபிடித்திருப்பார்கள். ஒரு மாதத்துக்குள் பூமியை மோதப்போகிறது என்றால், இப்போதைக்கு அது வெறும் கண்ணுக்கே தெரியத் தொடக்கி இருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லை. எரிஸ் என்கிற ஒரு கிரகம் இருப்பது என்னமோ உண்மைதான். ஆனால், அது பூமியை நெருங்கக்கூடிய அதி குறைந்த தூரமே நான்கு பில்லியன் மைல்கள்.
 
பூமி கவிழுமா? : பூமியின் வட முனைவும் தென் முனைவும் தமக்குள் இடமாறும் எனவும் ஒரு வதந்தி கிளம்பியுள்ளது. புவியின் காந்த முனைகள் நான்கு இலட்சம் வருடங்களுக்கு ஒருமுறை இடமாறும் என்பது உண்மைதான். அதுவும் மிக மெதுவாகத்தான் நடக்கும் என்பதுடன், அதுவும் வரும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு நடக்க வாய்ப்பில்லை.
 
வால்வெள்ளிகள் மோதுமா? : அத்தனை பாதிப்பை தரக்கூடிய வால்வெள்ளிகள் மோதும் சாத்தியங்கள் இல்லை. ( கடைசியாக அத்தனை பெரிய மோதுகை 65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர்தான் நடந்தது. அப்போதும் உலகம் அழியவில்லை. டைனோசர்கள்தான் அழிந்தன.) நாசாவானது தினம்தோறும் பூமியை மோதும், மோதக்கூடிய வால்வெள்ளிகளை பற்றி ஆராய்ச்சி செய்து இணையதளத்திலே பதிவிடுகிறது. அங்கெ பார்த்தால் தெரியும், எல்லாமே சுண்டைக்காய் அளவுள்ளவைதான் வந்து மோதுகின்றன.
 
நாசாவின் நிலைப்பாடு : எல்லாமே முட்டாள்தனமான வதந்திகள்தான். இதெல்லாம் உண்மை என்றால் ஏதாவது ஆதாரங்கள், விஞ்ஞான ரீதியான சாத்தியங்கள் இருக்கின்றனவா? இல்லை. எல்லாமே பம்மாத்து."
 
சமீபத்தில் நான் ஒரு ப்ளாக்கில் படித்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்...




இதை பற்றிய ஞானம் படைத்த கடவுளுக்கு மட்டுமே தெரியும்!



நீங்கதான் அதற்கு நாட்டாமை!....வர்ட்டா








Other News
1. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
2. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
3. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
4. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
5. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
6. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
7. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
8. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
9. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
10. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
11. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed
12. 07-06-2024 இந்தியத் தேர்தல் முடிவுகளும் சர்வதேச ஊடகங்களின் பார்வையும் - S Peer Mohamed
13. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed
14. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
15. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
16. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
17. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
18. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
19. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
20. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
21. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
22. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
23. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
24. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
25. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
26. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
27. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
28. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
29. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
30. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..