Posted by Haja Mohideen
(Hajas) on 2/1/2013
|
|||
எழுந்து நிற்கிறது சமுதாய ஒற்றுமை!அல்லாஹு அக்பர்! கீழை ஜஹாங்கீர் அரூஸி -தம்மாம்
பல்வேறு ஜாதி மதங்களை சார்ந்து வாழும் 120 கோடி இந்திய மக்கள் தொகையில்தனியொரு சமூகம் என்ற அடிப்படையில் பார்த்தால் முஸ்லிம்களின் எண்ணிக்கை 20 கோடியென ஒரு புள்ளி அறிக்கை தெரிவிக்கிறது. ஆனாலும் இந்திய முஸ்லிம்களுக்கு தேசத்தின் ஆட்சியாளர்கள் சூட்டியிருக்கும் பெயர் சிறுபான்மை சமூகம். சிறுபான்மை சமூகம் என்றால் பாவப்பட்ட சமூகம் என்பது போல மத்திய மாநில அரசுகளின் அணுகுமுறைகளும் அதன் திட்டங்களும் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் உண்மையான பலம் ஒவ்வொரு தேர்தலின் போதும் நிரூபிக்கப்பட்டு வருவதை மத்திய மாநில அரசியல் கட்சிகள் நன்கு உணர்ந்து கொண்டுள்ளனர். அப்படியானால் அரசியல் களத்தில் நமக்கான உரிமைகள் ஏன் மறுக்கப்படுகின்றன? இந்த கேள்விதான் ஒவ்வொரு இந்திய (குறிப்பாக தமிழ்) முஸ்லிம்களிடமும் இருந்து வருகிறது. இதற்கான பதிலும் நம்மிடமே உள்ளது.ஆம் ஒவ்வொரு தேர்தலின் போதும் முஸ்லிம் பிரதிநிதித்துவ அரசியல் கட்சிகள் ஏதாவது சிறிய பெரிய அரசியல் கட்சிகளுடன் ஒன்று அல்லது இரண்டு சீட்டுகளுக்கு பேரம் நடத்தி பல்வேறு குழுக்களாக பிரிந்து போய் விடுகின்றனர். இதன் விளைவு முஸ்லிம்களின் வாக்குகளை பெற்றவர்கள் ஆட்சியிலும் மற்றவர்களின் வாக்குகளை பெறமுடியாமல் சிறுபான்மை சமூகம் என்ற காட்சியிலும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தற்போது அரசியல் ரீதியாக நாம் சந்தித்து வரும் நெருக்கடிகளை விட சினிமா கூத்தாடிகளின் மூலமாக சந்திக்கும் நெருக்கடிகள்தான் அதிகமாகி கொண்டிருக்கின்றன. இதற்கு என்ன காரணமென்றால் பெரும்பாலும் முஸ்லிம்கள் சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இது நாம் பின்பற்றி வரும், குர் ஆன்,ஹதீஸ் ஒழுக்க வாழ்வியலை நமக்கு கற்றுத்தந்திருக்கும் சிறந்த பாடமாகும்.அதனால் தான் நாம் சினிமாவை வெறுக்கிறோம். முஸ்லிம்கள்யாரும் சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற விபரம் அறிந்த சினிமா கூத்தாடிகள் அவர்களின் வயிற்றுப்பிழைப்புக்காக முஸ்லிம்களை பற்றியும்,முஸ்லிம்கள் தங்கள் உயிரை விடவும் மேலாக கருதி வரும் உலகப்பொதுமறையான திருக்குர் ஆனையும்,நம் உயிரைவிடவும் மேலாக போற்றிவரும் நமதருமை நபிகளை பற்றியும் அவர்களின் வாழ்வியல் நடைமுறைகளை கொச்சைபடுத்தும் வகையில் சினிமா எடுத்து பிற சமுதாய மக்களுக்கு மத்தியில் முஸ்லிம்களின் மீதான நல்லெண்ணத்தை தகர்க்கும் முயற்சியில் இன்றைய சினிமாத்துறை கருத்து தீவிரவாதிகள் ஈடுபட்டு வருவதை எவ்வளவு காலம் தான் நாம் பொருத்துக்கொண்டிருப்பது? ஒன்றா?இரண்டா?எத்தனை சினிமாக்களில் முஸ்லிம்களின் கலாச்சாரத்தை இந்த கூத்தாடிகள் இழிவு படுத்தியுள்ளனர். கொட்ட கொட்ட குனிபவனும் முட்டாள்,குனிய குனிய கொட்டுபவனும் முட்டாள் என்ற பழமொழி தற்போது கமலஹாசனின் விஸ்வரூபம் சினிமாவுக்கு பொருந்தி விட்டது. தமிழகத்தின் ஒட்டு மொத்த முஸ்லிம் அமைப்புகளும் சினிமாக்கூத்தாடிகளின் முஸ்லிம் விரோத போக்கிற்கு எதிராக ஓரணியில் திரண்டிருப்பது பெருமைக்குரிய விசயமாகும். இனிமேல் வருங்காலத்தில் முஸ்லிம்களை பற்றியோ அவர்களின் கலாச்சாரத்தை பற்றியோ சினிமா என்ற பெயரில் யார் கலங்கப்படுத்த நினைத்தாலும் முஸ்லிம்களின் இந்த ஒற்றுமை அவர்களை சுட்டெரித்து விடும் என்பது மட்டும் நிச்சயம். முஸ்லிம் விரோத சினிமாவுக்கெதிரான இந்த ஒற்றுமை அரசியல் ரீதியாகவும் தொடருமா?என்ற பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு காலச்சூழ்நிலை அது போன்ற சந்தர்ப்பத்தை உருவாக்கும் போது கண்டிப்பாக இந்த ஒற்றுமை தொடரும் என 24 முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் கூறியுள்ள விசயம் மீடியாக்களில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன. அரசியல் ரீதியான சமுதாய ஒற்றுமை குறித்து பத்திரிக்கையாளர்களின் கேள்வியில் இருக்கும் நியாயத்தை நடுநிலையோடு ஒவ்வொரு முஸ்லிம் அமைப்பின் தலைவர்களும் அல்லாஹ்வை அஞ்சி அல்லாஹ்வுக்காக,மறுமையில் அவனது நற்கூலிக்காக தங்களிடையே இருக்கும் நீ பெரியவனா?நான் பெரியவனா?என்ற ஈகோயிசத்தை தூக்கியெறிந்து விட்டு காலத்தின் அவசியமறிந்து அல்லாஹ்வின் ஒற்றுமையென்னும் கயிற்றைபற்றி பிடிக்கும் வகையில், எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஒரே அணியில் திரண்டு குறைந்த பட்சம் 10 சீட் கொடுக்கும் பெரிய அரசியல் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி இல்லாவிட்டால் தனித்து போட்டி என்ற நிலைக்கு வரும்போதுதான் நமது முழுமையான அரசியல் பலம் நமக்கே தெரியும். கமலஹாஸனின் விஸ்வரூபம் சினிமா தமிழ் முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமையை விஸ்வரூபமாக்கிவிட்டது.அல்ஹம்து லில்லாஹ்.... எழுந்து நிற்கும் நம் சமுதாயத்தின் இந்த ஒற்றுமை முஸ்லிம்களுக்கெதிரான எல்லா விசயங்களிலும்,எல்லா காலங்களிலும் தொடர வேண்டுமென நாம் அனைவரும் மனமுருகி அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.அல்லாஹு அக்பர்! உங்கள் கருத்துக்களை jahangeerh328@gmail.com என்ற மின்னஞ்சல் அல்லது 00966-50-2818530 என்ற அலை பேசியிலோ தெரிவிக்கலாம். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |