Posted by S Peer Mohamed
(peer) on 3/6/2013
|
|||
மார்ச்-5; நான்குநேரி : நான்குநேரி அருகே கார் கவிழ்ந்ததில் வாலிபர் இறந்தார். ஏர்வாடியை சேர்ந்த அப்துல்காதர் மகன் சலாவுதீன்(21). இவரும், அதே ஊரை சேர்ந்த நிசார், அசாருதீன், முகமது ஆகியோரும் நேற்று ஏர்வாடியில் இருந்து நெல்லைக்கு காரில் புறப்பட்டனர். பாணான்குளத்திற்கும், தாழைகுளத்திற்கும் இடையே மூன்றடைப்பு போலீஸ் ஸ்டேஷன் அருகே கார் வந்த போது ரோட்டில் இருந்த பேரிக்கார்டில் மோதி கவிழ்ந்தது. இதில் கார் சேதமடைந்தது. சலாவுதீன், நிசார், அசாருதீன், முகமது படுகாயமடைந்தனர். 4 பேரும் பாளை., ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சலாவுதீன் இறந்தார்.விபத்து குறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நான்குநேரி இன்ஸ்பெக்டர் ராஜ் விசாரணை நடத்தினார் இவரின் தகப்பனார் அப்துல்காதர் கடந்த வருடம்தான் உடல்நலக்குறைவால் மரனமடைந்தார். சகோ.சலகுதீன் கடந்த 6 மாதத்திற்கு முன்புதான் ஆலங்குளம் அருகே பைக்கில் சென்றபோது ஆற்று பாலத்திற்கு கீழ் பைக் விழுந்து 1 மாதத்திற்கும் மேல் சிகிச்சை பெற்று வந்தவர்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இவருடைய மறுமை வாழ்கைக்காக துவா செய்வோம். . 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' அல் குர்ஆன் ஃ சூரா அல் - பகரா ஃ 02 : 156 எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' சுவனபதியில் நுழைய வைப்பானாக ஆமின். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |