Posted by S Peer Mohamed
(peer) on 3/9/2013
|
|||
இன்னும் நன்மையிலும். பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள் ( திருக்குர்ஆன் 5:2) அன்புள்ள சகோதர- சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்வின் கருணையினால் இம் மடல் தங்களை உயரிய ஈமானுடனும் சீரிய உடல்நலத்துடனும் சந்திக்கட்டுமாக... ஏர்வாடி மக்களின் நலனில் அக்கறை கொண்டு நீங்கள் ஆற்றி வரும் நற்காரியங்களுக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நற்கூலி வழங்குவானாக. அல்லாஹ் நம்மில் சிலருக்கு வழங்கியிருக்கும் பொருளாதாரங்களை நம்மோடு பிறந்து, நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் நமது ஊரை சேர்ந்த வறுமையில் வாடும் சிலருக்கு உதவி செய்யும் பாக்கியத்தை வழங்கியிருக்கிறான்.(அல்ஹம்துலில்லாஹ்) நமது சமுதாயத்தில் பல்வேறு பொருளாதார காரணங்களால் பரிதவித்தும், தங்களின் பொருளாதார இயலாமையால் , பருவ வயதடைந்தும் திருமணம் முடிக்க முடியாம லும், குடும்ப வறுமையின் காரணத்துக்காகவும் தன்மானம் பார்க்காமல் நமதூர்,வெளியூர்,வெளிநாடு என்று கையேந்தி வாரிசுகளை கரை சேர்க்கவேண்டும் என்பதற்காக அடுத்தவர்களிடம் கையேந்தக்கூடிய நிலைமையில் இருக்க கூடிய பெற்றோர்கள், அவர்கள் பெண்களுக்கு அவர்கள் வேறு யாரிடமும் எவ்வித உதவியும் கேட்க கூடாது, நாமும்,நம்மைப் போல் நலன் நாடுவோரும் ஒருங்கிணைந்து இவர்களின் துயர் துடைக்க முயற்சி செய்வோம் கூட்டாக வருடத்திற்கு குறைந்த பட்சம் 10 திருமணங்களை ஒரே மேடையில் கூட்டாக நடத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் சில சகோதரர்கள் சிந்தித்ததன் விளைவு இங்கு ஒரு வித்து ஊன்றப்பட்டுள்ளது. (இது நம் சமுதாயத்தில் துடைத்தெரிய பட வேண்டிய வரதட்சணையாலேயே இந்த இழி நிலையென்றாலும் இதனால் தேங்கி இருக்கும் குமருகளுக்கான தீர்வே இந்த முயற்சி. அல்லாஹ்வின் கிருபையால் இந்த நலதிட்டத்தோடு இந்நிலை மாறவும் இந்த குழு துஆ வோடு என்றும் பெருமுயற்சி செய்யும்) வருடத்திற்கு 10-க்கும் மேற்பட்ட குமர்களுக்கு தலா ரூ.1,50,000/= வீதம், 10 குமர்களுக்கு ரூ. 15,00,000/= வரை சமுதாய நலன் நாடும் ஏர்வாடியைச் சார்ந்த சகோதர,சகோதரிகள் மூலம் நிதி வசூல் செய்யலாம் என முடிவெடுத்து ஒரு பங்களிப்பு (contribution) ரூ.15000/= என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 100 contribution வரை வருடத்திற்கு திரட்ட வேண்டும். பங்களிப்புக்களை சேகரித்து வருடந்தோரும் வழங்கலாம் என்றும் அதன் அடிப்படையில் இதற்கான ஓர் குழுவையும் கடந்த 6/01/2013 அன்று ஏற்படுத்தி செயலாற்றி வருகிறோம்(அல்ஹம்துலில்லாஹ்). மேலும் இதில் ஆர்வமுள்ள அமைப்புகளையும் தனி நபர்களின் ஆதரவையும் ஆலோசனையையும் பெறப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். இதன் மூலம் ஏராளமான குமர்களுக்கு உதவிகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் உங்களின் ஆதரவையும் ஆலோசனைகளையும் எதிர் நோக்கியவர்களாக….. --நிக்காஹ் ஏர்வாடி குழு.— தங்களது பங்களிப்புக்களை இக்குழுவிற்கு தந்து ஏழை குமர்களின் வாழ்வில் ஒளியேற்ற எல்லாம் வல்ல இறைவன் தங்களது உள்ளங்களில் உதவி செய்யும் எண்ணத்தை ஏற்படுத்தி தருவானாக.......... தங்களது பங்களிப்புக்கள் விரைவாக உறுதி செய்யப்படும் நிலையை பொருத்தே குமர்கள் எத்தனை என்பது முடிவு செய்யப்படும். அதனால் விரைவாக தங்களது பங்களிப்புக்களை உறுதி செய்தால் குழுவின் அடுத்த கட்ட செயல்பாடு விரைவாக இருக்கும். அல்லாஹ் நமது நற்காரியங்களை ஏற்று மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நாம் அனைவரும் ஒன்றாக இருக்க அருள்புரிவானாக.. தங்களின் பங்களிப்புக்களை உறுதிப்படுத்த கீழ்கண்ட சகோதரர்களில் ஒருவரை தொடர்பு கொள்ளவும்.
M.A. ஆஸாத் maazad.577@gmail.com
- BK முஹ்யித்தீன்
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |