Posted by Haja Mohideen
(Hajas) on 3/9/2013
|
|||
"டிவி' சீரியல் பார்ப்பதால் எந்த பலனும் இல்லை : பெண்களுக்கு சின்னப்பிள்ளை வேண்டுகோள் மார்ச் 09,2013,00:06 IST
திண்டுக்கல்,: "" பெண்கள் "டிவி' சீரியல் பார்த்து நேரத்தை வீணடிக்கின்றனர் . இதனால் எந்தப் பலனும் கிடையாது ,'' என "ஸ்திரீ சக்தி' விருது பெற்ற சின்னப்பிள்ளை கேட்டு கொண்டார்.திண்டுக்கல்லில், களஞ்சிய பரஸ்பர இயக்கம் சார்பில், மகளிர் தின விழா நடந்தது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம், "ஸ்திரீ சக்தி' விருது பெற்ற களஞ்சிய பரஸ்பர இயக்க தலைவர் சின்னப்பிள்ளை பேசியதாவது:கூலித் தொழிலாளர்களின் குடும்பங்கள் சீரழிவதற்கு, மது முக்கிய காரணம். குடிப்பதற்காக அதிகமாக செலவிடும் கணவனை கண்டிக்க முடியாமல், பெண்கள் விரக்தியில் வாழ்கின்றனர்.தமிழகத்தில், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். அதற்கான அறிவிப்பை, அரசு வெளியிடும் வரை, மது விற்பனையை எதிர்த்த கடிதங்களை, அரசிற்கு தொடர்ந்து அனுப்ப வேண்டும்.மதுவிற்கு அடிமையானவர்களை குணப்படுத்துவது, மீண்டும் மதுவை நாடாமல் இருப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக்கொடுப்பது போன்ற பணிகளை, களஞ்சிய பரஸ்பர இயக்கம் செய்து வருகிறது. பெண்கள் பலர் "டிவி' சீரியல்களை பார்த்து, நேரத்தை வீணடிக்கின்றனர். இதனால் எந்த பலனும், மாற்றமும் ஏற்படப்போவதில்லை. அறிவையும், திறமையையும் வளர்த்துக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் குடும்பத்தின் வருமானத்தை தக்கவைத்துக் கொள்ளலாம்."சுமங்கலி' திட்டம் என்ற பெயரில், இளம் பெண்களை பஞ்சாலைகளுக்கு அனுப்பி வைக்கும் கொடுமை, பல கிராமங்களில் நடக்கிறது. களஞ்சியம் பரஸ்பர இயக்கம் மூலம், இதுவரை, 250 கோடி ரூபாய் சேமித்துள்ளோம்; மகளிர் குழுவினருக்கு, 740 கோடி ரூபாய் வரை, கடன் அளித்துள்ளோம். இயக்கத்தில் 12 மாநிலங்களை சேர்ந்த 7 லட்சம் பெண்கள் உள்ளனர்.இவ்வாறு, சின்னப்பிள்ளை பேசினார். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |