Posted by Haja Mohideen
(Hajas) on 5/1/2013
|
|||
நெல்லை- மும்பை தாதர் ‹ப்பர் பாஸ்ட் ரயில் சேவை இன்று முதல் துவக்கம் மே 01,2013,06:26 IST திருநெல்வேலி:நெல்லை- மும்பை தாதர் இடையே கொங்கன் ரயில்வே வழியாக இயக்கப்படும் ‹ப்பர் பாஸ்ட் ரயில் சேவை இன்று (1ம் தேதி) முதல் துவங்குகிறது. நெல்லை மாவட்டத்தில் இருந்து மும்பைக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து, நெல்லை- மும்பை தாதர் இடையே வாரந்திர ‹ப்பர் பாஸ்ட் ரயில் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்தது. இந்த ரயில் சேவை நெல்லையில் இருந்து இன்று (1ம் தேதி) முதல் துவங்குகிறது. நெல்லை- மும்பை தாதர் ‹ப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 22630) இன்று காலை 7.10 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படுகிறது. இந்த ரயில் நாளை (2ம் தேதி) மாலை 3.10 மணிக்கு மும்பை தாதரை சென்றடையும். அதுபோல் மும்பை தாதர்- நெல்லை ரயில் (எண்: 22629) வரும் 3ம் தேதி இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு, 5ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நெல்லை வந்தடையும். இந்த ரயிலில் ஒரு ஏசி., 2 டயர், 1 ஏசி., 3 டயர், 6 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 சரக்கு வசதியுடன் கூடிய பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, சோரனூர், கோழிக்கோடு, கண்ணூர், மங்களூரு ஜங்ஷன், உடுப்பி, கோனாவர், கர்வார், மட்கான், திவிம், கன்காவிலி, ரத்னகிரி, சிப்ளன், ரோகா, பன்வேல், தானே ஆகிய ஸ்டேஷன்களில் நின்று செல்லும். நெல்லை- மும்பை தாதர் ரயில் ஒவ்வொரு புதன்கிழமையும் நெல்லையில் இருந்து புறப்பட்டு, வியாழக்கிழமை மும்பை சென்றடையும். மறுமார்க்கத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மும்பையில் இருந்து புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை நெல்லை வந்தடையும். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |