Posted by Haja Mohideen
(Hajas) on 6/5/2013
|
|||
உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்!கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்.
மனிதர்களே! பூமியில் உள்ளவற்றிலிருந்து (உண்ண)அனுமதிக்கப்பட்ட நல்லவற்றை உண்ணுங்கள்.மேலும் ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள்.நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான விரோதியாவான்.(அல்குர்ஆன் அத்தியாயம்-2 ,வசனம்-168 ).
நபிகள் நாயகம்(ஸல்)அவர்களிடம் மஆதுப்னு ஜபல்(ரலி)அவர்கள் யாரசூலுல்லாஹ்!
என்னுடைய துஆக்களை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?எனக்கேட்டார்கள்.
அதற்கு இஜ்அல் தஆமக ஹலாலன் தையிபா! உம்முடைய உணவை ஹலாலானதாகவும்,தூய்மையானதாகவும் வைத்துக்கொள்ளும் என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.(புகாரி)
முஃமீன்களே!(அசலுக்கு அதிகமாகவும்,வட்டிக்கு வட்டியாகவும்)இரட்டிப்பாக்கப்பட்டு பன்மடங்காக்கப்பட்ட நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்; இன்னும் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள்;(இதனை தவிர்த்துக்கொண்டால்)நீங்கள் வெற்றியடைவீர்கள்.(அல்குர்ஆன்,அத்தியாயம்-3,வசனம்-130)
உணவிலும்,குடிப்பிலும் பாலைவிட பயனுள்ள எதையும் நான் பார்க்கவில்லை என்று நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்.(மிஷ்காத்)
அன்பிற்குரியவர்களே!மேலே கூறப்பட்டிருக்கும் இறைவசனமும்,இறைத்தூதர் மொழியும் மனிதன் எதை உண்ணவேண்டும்?எதை குடிக்கவேண்டும்? என்பதை மிக அற்புதமாக சொன்னபிறகும்,
இறைவனால் எச்சரிக்கப்பட்ட ஷைத்தானின் உணவையும்,பானத்தையும் உட்கொள்வதால் நஷ்டம் இறைவனுக்கோ,இறைத்தூதருக்கோ இல்லை!மனிதர்களாகிய நமக்குத்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
(குறிப்பு): வட்டிப்பணத்திலிருந்து உண்ணும் உணவும்,இறைவனால் தடுக்கப்பட்டுள்ள மதுபானமும் ஷைத்தானுடையது என்பதையும்,
தன் சம்பாத்தியத்தில் உண்ணும் உணவும்,நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் விரும்பி பருகிய மாடு,ஒட்டகை போன்றவைகளின் பாலை குடிப்பது இறைவனுக்கு பிரியமானது என்பதையும் மனதில் வைத்து உண்ணுவதிலும்,பருகுவதிலும் தூய்மையை பேணுவோம்! |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |