“இதனை ஏதோ காட்டுத்தனமான போர் என்று நினைக்கவேண்டாம். இது மனிதகுல விடுதலையினை மீட்டெடுக்கிற போராட்டம்” - வியட்நாம் போர் குறித்து அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சன், 1964
Image courtesy : Wikimedia
“ஆப்கானை மீட்கவந்த போராளிகளுக்கு நாம் ஆதரவு தரவேண்டும்” - முஜாகிதீன்களாக இருந்த தாலிபான்கள் குறித்து அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன், 1985
“ஜனநாயகத்தையும் மனிதவுரிமைகளையும் நிலைநாட்டுவதற்காகவும், பனாமாவில் வாழ்கிற அமெரிக்கர்களின் உயிரைக் காப்பாற்றவுமே பனாமாவோடு போருக்குச் செல்கிறோம்.” - அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் (அப்பா)
“ஈராக்கானாலும் சரி, ஆப்கானிஸ்தான் ஆனாலும் சரி, தீவிரவாதிகளிடமிருந்து மக்களுக்கு விடுதலை வாங்கித்தருவது எங்களது கடமையாகவே கருதுகிறோம். அமைதியை நிலைநாட்டுவதற்காக மட்டுமே நாம் போர் புரிகிறோம் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும்” - அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் (மகன்)
“சதாம் உசைனிடம் இராசயன ஆயுதங்கள் இருக்கின்றன” -அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் (மகன்)
“தாலிபான்களை வரவிடக்கூடாது என்கிற ஆப்கானிஸ்தான் மக்களின் எண்ணங்களுக்கு உதவ நினைக்கிறோம்” -ஹிலாரி கிளிண்டன்
இவையெல்லாம் ஒவ்வொரு போரையும் துவக்குவதற்கு முன்னர் அமெரிக்க பெருந்தலைவர்கள் உதிர்த்த வைரவார்த்தைகள். ஆனால் அப்போர்களின் காரண காரியங்கள் என்ன என்பதும் போர்களுக்குப் பின்னால் நிகழ்ந்தது என்ன என்பதுவும் உலகமே அறிந்தவைதான். பொய்களைச் சொல்லியே வியட்நாம் போரினை நடத்தியவிதத்தை, டேனியல் எல்ஸ்பர்க் வெளியிட்ட “பென்டகன் பேப்பர்ஸ்” காட்டிக்கொடுத்தது. புதிதாகத்தயாரித்த லேசர் குண்டுகளை பரிசோதித்துப் பார்க்கவே பனாமாவிற்குள் நுழைந்து போர்புரிந்ததை, பனாமா மக்கள் கொல்லப்பட்ட விதத்திலிருந்து வெளியானது. சோவியத்திற்கு எதிராக புதிய நண்பர்களை உருவாக்கி, பின்னர் அவர்களையே தீவிரவாதிகள் எனச்சொல்லி 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தானில் போர்புரிந்து பல இலட்சக்கணக்கான மக்களை கொன்றுகுவித்துவிட்டு, அவர்களுடனேயே தற்போது பேச்சுவார்த்தையும் நடத்திவருவது நாம் அனைவரும் அறிந்ததே. ஒரு போரில் சதாம் உசைனிற்கு அணுகுண்டுகள் வழங்கி ஆதரித்து, சில ஆண்டுகள் கழித்து அதே சதாம் உசைனைப் பிடித்து தூக்கில் போட்டதையும் கண்கூடாகப் பார்த்தோம்.அந்த வரிசையில் தற்போதைய வைரவரிகள்,
“இராசயன குண்டுகள் வீசிய சிரியா மீது இராணுவத் தாக்குதல் நடத்துவோம்” – அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஒபாமா.
என்ன நடக்குது சிரியாவில்? யாருக்கான போரிது?
போர் என்பது இரு நாடுகளுக்கிடையிலான வெற்றியினை நோக்கிய போராட்டம் மட்டுமல்ல. போரென்பது அதையும் தாண்டிய வியாபாரம்;விற்பனை;இலாபம்; 2011 ஆம் ஆண்டில் உலகின் முதல் 100 போராயுதங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மட்டுமே 30 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு போராயுதங்களை விற்பனை செய்திருக்கின்றன. இவற்றில் முதல் 10 நிறுவனங்கள் மட்டுமே 15 லட்சம் கோடி ருபாய் அளவிற்கு வர்த்தகம் மேற்கொண்டிருக்கின்றன. ஆனாலும் முந்தைய ஆண்டுகளைவிடவும் இது 5% குறைவானதே. ஈராக் போர் ஏறத்தாழ முடிவடைந்துவிட்டது, ஆப்கானிஸ்தானிலிருந்தும் அமெரிக்க படைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. தென்னமெரிக்காவிலும் பல நாடுகளில் முன்புபோல குழப்பங்கள் விளைவித்து ஆயுதங்களை விற்கமுடிவதில்லை. வடகொரியா, ஈரான் போன்ற நாடுகள் போருக்கு வருமா வராதா என்கிற தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. அதனால் போராயுதங்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக ஒரு புதிய போரினை துவக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது அமெரிக்க கார்ப்பரேட் அரசு. ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமல்லாது, போர் புணரமைப்பு நிறுவனங்களும் மற்றுமொரு போரினை எதிர்நோக்கியிருக்கின்றன.
அதற்கு சிரியாவைத் தேர்ந்தெடுக்கச் சில காரணங்கள் இருக்கின்றன:
* அதிகளவில் நண்பர்களில்லாத எதிரியாக இருந்தால்தான், முதலுக்கு மோசமில்லாத போராக அமையும் என்பதுவும் சிரியாவைத் தேர்ந்தெடுக்கக் காரணமாகும்.
* சவுதி அரேபியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு எண்ணைக் குழாய்போடுவதற்கு வசதியாக, சிரியாவில் பொம்மை அரசு அமைவது சவுது அரேபியாவிற்கு அவசியமென்பதால், இப்போரில் அமெரிக்காவிற்கு நிச்சயமாக உதவும் என்கிற நம்பிக்கையும் ஒரு காரணம்.
* பூகோள அரசியல் நலனிற்கும் சிரியா இருக்கிற இடம் மிகமுக்கியாமனதாகும்.
நிறுவனம் | ஆயுத விற்பனை மட்டும் | மேலதிக விவரம் |
யுனைடட் டெக்னாலஜிஸ் | 78000 கோடி ரூபாய் (2011) | இராணுவ ஹெலிகாப்டர்கள், சீஹாக் ஹெலிகாப்டர்கள், ப்ளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள், எஞ்சின்கள் போன்றவற்றை தயாரிக்கிறது இந்நிறுவனம். நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் ஆயுதவிற்பனை மட்டும் 20% ஆகும். |
எல்3 கம்யூநிகேசன் | 85000 கோடி ரூபாய் (2011) | மின்னணு போராயுத கருவிகள், போர் கண்காணிப்புக் கருவிகள், பாதுகாப்புக் கருவிகள் போன்றவற்றை தயாரிக்கிறது இந்நிறுவனம். நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் ஆயுதவிற்பனை மட்டும் 83% ஆகும். |
ஃபின்மெக்கானிகா | 1 லட்சம் கோடி ரூபாய் (2011) | பீரங்கிகள், எஞ்சின்கள், மின்னணு போர்க்கருவிகள், போர் வாகனங்கள், ஏவுகணைகள், இராணுவ ஹெல்காப்டர்கள் போன்றவற்றை தயாரிக்கிறது இந்நிறுவனம். இந்திய இராணுவத்திடமிருந்து 5000 கோடி ரூபாய்க்கு 1.2 கோடி இராணுவ ஹெலிகாப்டர்களுக்கான ஒப்பந்தத்தை பெறுவதற்காக, சில நூறு கோடிகள் லஞ்சம் கொடுத்ததாக இந்நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டும் வைக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. குற்றச்சாட்டிற்குப் பிறகு, விசாரணையிலிருந்து தப்பிக்க நிறுவனத்தின் உயரதிகாரிகள் பலரும் மாற்றப்பட்டுள்ளனர். |
இ.ஏ.டி.எஸ். | 1,10,000 கோடி ரூபாய் (2011) | ஏவுகணைகள், மின்னணு போர் ஆயுதங்கள் போன்றவற்றை தயாரிக்கும் நெதர்லாந்தைச் சேர்ந்த் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 24% போராயுதம் தொடர்பானவையாகும். |
நார்த்ரோப் க்ரும்மன் | 1,44,000 கோடி ரூபாய் (2011) | ஏவுகணைகள், போர்க்கப்பல்கள், மின்னணு போராயுதங்கள் தயாரிக்கிறது இந்நிறுவனம். இந்நிறுவனத்தை பி.ஏ.இ.சிஸ்டம்சுடன் இணைப்பதற்கு நடந்த முயற்சி இறுதியாகத் தோல்வியடைந்தது.இவ்வாண்டு மிகப்பெரிய போரினை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருக்கிறது இந்நிறுவனம். |
ரேதியோன் | 1,52,000 கோடி ரூபாய் (2011) | ஏவுகணைகள் செய்வதை முக்கியமான தொழிலாகக் கொண்டிருக்கும் இந்நிறுவனத்தின் ஆயுத விற்பனைமட்டும் ஒட்டுமொத்த விற்பனையில் 90% ஆகும். 2013இல் மிகப்பெரிய அளவில் இலபமீட்டாவிட்டால் இந்நிறுவனம் தாக்குப்பிடிப்பது கடினம் என்கிற நிலையில், சிரியாவுடன் அமெரிக்கா போர் தொடுக்கும் என்ற செய்தி வெளியான மறுநாளே, இந்நிறுவனத்தின் பங்குகள் வரலாறு காணாத அளவிற்கு பலமடங்கு உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. |
ஜெனரல் டைனமிக்ஸ் | 1,60,000 கோடி ரூபாய் (2011) | போர்க்கப்பல்கள், சிறியவகை போராயுதங்கள், போர் டாங்கிகள், போர் வாகனங்கள் போன்றவைதான் இந்நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்கள். 2011 இல் மட்டும் 18000 வர்த்தக பரிவர்த்தனைகளை மேற்கொண்டு அமெரிக்காவில் மூன்றாவது பெரிய ஆயுத விற்பனை நிறுவனமாக விளங்குகிறது. எம்1ஏ1 ரக பீரங்கி டாங்குகள் தயாரிக்கத் தேவையான உதிரிபாகங்களை விற்றே கோடிக்கணக்கில் இலாபம் பார்த்த நிறுவனமிது. 2011இல் கூட 2500 கோடி ரூபாய் அளவிற்கு எகிப்திற்கு போராயுதங்களை அனுப்புவதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்க அரசு இந்நிறுவனத்திற்கு வழங்கியது. 2012இல் மீண்டும் 250 கோடி ரூபாய் மதிப்பிலான எம்1ஏ1ரக பீரங்கி டாங்கி உதிரிபாகங்களை விற்கிற ஒப்பந்தம் பெற்றது. |
பி.ஏ.இ. சிஸ்டம்ஸ் | 1,97,000 கோடி ரூபாய் (2011) | அமெரிக்க நிறுவனமல்லாத உலகின் மிகப்பெரிய போர் ஆயுத உற்பத்திநிறுவனம் இது. நிலத்தில் சண்டையிடத்தேவையான போர் வாகனங்களை உற்பத்திசெய்வதில் முன்னணியில் இருக்கிறது இந்நிறுவனம். இந்நிறுவனத்தின் மொத்த உற்பத்தியில் 95% ஆயுத விற்பனைதான். |
போயிங் | 2,15,000 கோடி ரூபாய் (2011) | போர் ஆயுதங்களுக்கான மின்னனுபாகங்கள், ஏவுகணைகள், லேசர் கருவிகள் மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் தயாரிக்கிறது இந்நிறுவனம். இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில், 46% ஆயுத விற்பனைதான். நாசாவிடமிருந்து ஏராளமான ஒப்பந்தங்கள் இந்நிறுவனத்திற்கு தொடர்ந்து கிடைக்கின்றன. |
லாக்ஹீட் மார்டின் | 2,45,000 கோடி ரூபாய் (2011) | ஏவுகணைகள், உளவு பார்க்க உதவுகிற கருவிகள், போர் விமானங்கள், ஆளில்லா விமானங்கள் போன்றவைதான் இந்நிறுவனத்தின் முக்கியமான தயாரிப்புகள். இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில், போர் ஆயுத விற்பனை மட்டுமே 78% ஆகும். பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஆட்குறைப்பு நிகழ்த்தும் எண்ணத்தை, அமெரிக்க அரசே தலையிட்டு நிறுத்திவைத்தது. எகிப்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிற இராணுவக் குழப்பங்களுக்கு இந்நிறுவனத்தின் போராயுதங்கள் பெருவுதவி செய்துகொண்டிருக்கின்றன. எகிப்து அரசிற்கு இராணுவ உதவிகளாக 16,000 கோடி ரூபாயினை தருவதாக உறுதியளித்திருந்த அமெரிக்க அரசு, அப்பெரும்பணத்தினை இந்நிறுவனத்தின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாகச் செலுத்திவிட்டது. எகிப்தில் மோர்சி அரசு இப்போதுதான் கவிழ்க்கப்பட்டது; ஆனால் அதற்கான ஆயுதங்களை வழங்க சென்ற ஆண்டே ஒப்பந்தம் போட்டாகிவிட்டது இந்நிறுவனத்திடம். |
ஹல்லிபுர்டன் | கோடி ரூபாய் (2011) | இராணுவத் தளவாடங்கள் அமைப்பது, எண்ணைக் கிணறுகளை புணரமைப்பது போன்ற பணிகளின்மூலம் கோடிக்கணக்கில் பணம்சேர்த்த நிறுவனமிது. குறிப்பாக ஈராக் போரின்போது, இந்நிறுவனம் அதிகளவில் செயல்பட்டது. |
டின்கார்ப் | கோடி ரூபாய் (2011) | போர்ப்பகுதிகளில் அமெரிக்காவிற்கு ஆதரவான கூட்டத்திற்கு போர்ப் பயிற்சி கொடுக்கிற பணியினை செய்தே, மக்கள் பணத்தை அள்ளிச்சுருட்டியது இந்நிறுவனம்” |
வாஷிங்டன் குரூப் இன்டர்நேஷனல் | கோடி ரூபாய் (2011) | |
என்விரோன்மெண்டல் கெமிக்கல் | கோடி ரூபாய் (2011) | |
ஏகிஸ் | கோடி ரூபாய் (2011) | |
இன்டர்நேஷனல் அமெரிக்கன் ப்ராடக்ட்ஸ் | கோடி ரூபாய் (2011) | |
எரிநிஸ் | கோடி ரூபாய் (2011) | |
ஃப்ளோர் | கோடி ரூபாய் (2011) | |
பெரினி | கோடி ரூபாய் (2011) | |
யு.ஆர்.எஸ். கார்ப்பரேசன் | கோடி ரூபாய் (2011) | |
பார்சன்ஸ் | கோடி ரூபாய் (2011) | |
அர்மோர் ஹோல்டிங்க்ஸ் | கோடி ரூபாய் (2011) | |
ஏ.எம். ஜெனரல் | கோடி ரூபாய் (2011) | |
ஹெச்.எஸ்.பி.சி. | கோடி ரூபாய் (2011) | |
மெர்சண்ட் பிரிட்ஜ் | கோடி ரூபாய் (2011) | |
குளோபல் ரிஸ்க் ஸ்ட்ரேடஜி | கோடி ரூபாய் (2011) | |
கண்ட்ரோல் ரிஸ்க் | 250 கோடி ரூபாய் (2011) | அமெரிக்க இராணுவம் அரையும் குறையுமாக இடித்துத் தள்ளிய கட்டிடங்கள் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்கின்றனவா எனப் பரிசோதிக்கிற நிறுவனம். புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு ஆகிற செலவின் அளவிற்கு இந்நிறுவனம் பணத்தை கரந்துவிடும். |
காகி | 1500 கோடி ரூபாய் (2011) | போர் மற்றும் இராணுவம் தொடர்பான மென்பொருள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நிறுவனமிது. |
பெச்டேல் | 40,000 கோடி ரூபாய் (2011) | இரண்டாம் உலகப்போர் காலத்திற்கு முன்பிலிருந்தே, போர் புணரமைப்பில் மிகப்பிரபலமான நிறுவனமிது. |
கஸ்டல் பேட்டில் | 2000 கோடி ரூபாய் (2011) | இந்நிறுவனம் ஈராக் போரின்போது துவக்கப்பட்ட நிறுவனம். செய்யாத வேலைக்கு கோடிக்கணக்கில் கணக்கு காண்பித்து, ஈராக் மக்களின் பணத்தையும் சுருட்டிக்கொண்டு முகவரி இல்லாத நிறுவனமாக காணாமல் போய்விட்டது இந்நிறுவனம். மற்றொரு போரில் வேறொரு பெயரில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. |
நூர் யு.எஸ்.ஏ. | 2600 கோடி ரூபாய் (2011) | ஈராக் போர் தொடங்கியவுடன் முளைத்த நிறுவனம் இது. துவங்கியவுடனேயே 2600 கோடி ரூபாய் அளவிற்கு ஒப்பந்தங்களைப் பெற்றது இந்நிறுவனம். |
ஜெனரல் எலெக்ட்ரிக் | 1,30,000 கோடி ரூபாய் (2003-2011) | தகவல்தொடர்பு மின்னணு போர்க்கருவிகள் தயாரிப்பதில் முன்னணியில் இருக்கிறது இந்நிறுவனம். அவர்கள் தயாரித்த ஐபிஎல் 5100 என்கிற கருவியை பீரங்கிகளில் பொருத்தினால், 360 டிகிரியிலும் எதிரிகளை கண்காணிக்கலாம். |