பதிவு செய்த நாள் : Sep 14 | 08:43 pm
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) வழக்கம் போல் பள்ளிக்கூடங்கள் செயல்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஜெயக்கண்ணு தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், நெல்லை மாவட்டத்தில் நாளை 16–9–2013 திங்கட்கிழமை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுவதாக தவறான தகவல் பரவி உள்ளது. எனவே நாளை அனைத்து பள்ளிகளும் முறையாக செயல்படும் என்று ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது என்றார்.
http://www.dailythanthi.com/Tirunelveli%20District%20Primary%20Education%20Officer