Posted by Nsjohnson
(nsjohnson) on 9/18/2013 9:39:45 PM
|
|||
பற்களைத் தாங்கிப்பிடித்து பற்களின் நலன் காப்பது ஈறுகள்தான். முறையாகப் பல் துலக்காததாதல் பல் இடுக்குகளில் உணவுத் துணுக்குகள் தங்கிவிடுவதாலும் அவை நொதித்து, பாக்டீரியாக்கள் பெருகுகின்றன. இதனால் அழுக்கு ஒரு மெல்லிய படலமாகப் படிந்து, காரையாகி பின்னர் சற்று உறிதியான காரை ஏற்பட்டு ஈறுகளைப் பாதிக்கிறது. பின்னர் இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இந்த நிலையில் ஈறுகள் வீங்கி விடும். சிவப்பாகவும் காணப்படும். சிலருக்கு வாய் துர்நாற்றமும் இருக்கும். ஆனால், வலி இருக்காது. தாய்மை அடைந்த காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், ஸ்கர்வி போன்ற நோய்கள் இரத்த சோகை போன்றவையும் இத்தகைய பாதிப்புக்குக் காரணமாக அமையலாம். ஈறுகளில் இரத்தக் கசிவை கவனிக்காமல் விட்டால் இறுதியில் பற்களை இழக்க வேண்டியிருக்கும். முதல் நிலையாக பாக்டீரியாக்களையும் பற்களின் இடையே தங்கிவிட்ட உணவு துணுக்குகளயும் முழுமையாக அகற்ற வேண்டும். பின்னர் அழுக்குகள் காரைகளை முறையாக அகற்ற வேண்டும். சில நேரம் வலி ஏற்படாமலிருக்க சிறிதளவு மயக்க மருந்து ஊசி போட வேண்டியிருக்கும். இவற்றை முறையாக ஒரு பல் மருத்துவர் மூலமே செய்யவேண்டும். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |