Posted by Nsjohnson
(nsjohnson) on 9/20/2013 3:24:04 AM
|
|||
தமிழகம் முழுவதும் காலாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை +2 வேதியியல் தேர்வுக்கு கேள்வித்தாள்களை பள்ளிகளில் வழங்கியுள்ளனர். அதைப் பார்த்த மாணவ மாணவியர் அதிர்ச்சி அடைந்தனர். காலாண்டு தேர்வுக்கு என்று, பாட அட்டவனையில் இத்தனை பாடம் என்று கணக்கிடப்பட்டு, அதன்படி, கேள்விகள் கேட்கப் படுவது வழக்கம். அதன்படி, சென்ற வருட கேள்வித் தாள்களை மனத்தில் கொண்டு, ஆசிரியர்கள் இந்த முறை கால அட்டவணைக்கு உட்பட்டு பாடம் நடத்தி மாணவர்களைத் தயார் செய்துள்ளனர். இதனிடையே இன்று வழங்கப்பட்ட கேள்வித் தாளில் 30 மதிப்பெண்களுக்கு மேல் அட்டவவணைக்கு வெளியே இருந்து கேள்விகள் கேட்கப் பட்டிருந்ததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கேள்வி எண் 9, 10, 29, 30, 50 51, 55 63 65ஆ, 68ஆ இந்தக் கேள்விகள் அட்டவணைக்கு வெளியே மற்ற பாடங்களில் இருந்து கேட்கப்பட்டிருந்ததாம். இது காலாண்டுத் தேர்வு என்றாலும், மாணவர்கள் இதனால் செய்வதறியாது திகைத்தனர். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |