" வேர்களை மறக்காத விழுதுகள் " ஈமானிய மொட்டுக்கள் நிகழ்வுகள் நேரில் கண்டேன் மனம் மகிழ்ந்தேன் 13- 10 -2013 அன்று துபாய் இமான் அமைப்பின் சார்பாக நமதூரில் நடந்த முழுநாள் நிகழ்வில் நானும் பார்வையாளனாய் போய் " பரிசளிப்பவனாய் " மாறி நிகழ்வுகள் யாவையும் கண்டுகளித்தேன் .
நிகழ்வுக்கான ஏற்பாடுகள் யாவும் மிக கச்சிதமாய் இருந்தது .'கிராத் 'ஓதும் போட்டி தொடங்கி ,கேள்வி பதில் ,நாடகம் இன்னும் பல நிகழ்வுகள் விறுவிறுப்பாய் இருந்தது.கேள்வி பதில் போட்டியில் மாணவர்களை விட பெற்றோர்கள் ஆர்வமாய் இருந்தார்கள் . காலை நேரம் அமர்விலும் ,மாலை நேர அமர்விலும் ஆண்களை விட பெண்களே மிக அதிகமாய் அரங்கம் நிறைந்து இஸ்லாமிய கலாசார உடை அணிந்து அமைதியாய் காணப்பட்டார்கள்.பார்க்க மன மகிழ்வாய் இருந்தது இஸ்லாமிய மார்க்க அறிவில் நமதூர் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது .அதற்க்கு இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நமதூரில் நடைபெறுவதால் மார்க்க விசயத்தில் நல்ல ஒரு மறுமலர்ச்சி கண்டுள்ளது.அல்ஹம்துலிலாஹ்.போட்டியில் வெற்றிபெற்ற மாணவ ,மாணவியர்களுக்கு தங்க காசு ,மற்றும் விலைமதிப்பு மிக்க பொருள்கள் கொடுத்தது பரிசுவாங்கியவர்களின் முகத்தில் மகிழ்சியை காட்டியது .
பொருள்காட்சியில் நாம் மறந்திட்ட பல பொருள்கள் காணப்பட்டன குரிப்பாய் மால.,அரபு எழுதும் பலகை , அரபு எழுதும் எழுத்தாணி , இன்னும்பல ... மறக்காம்மல் அந்தகாலத்தில் நமக்கு அரபு ஓதி கற்று தந்த மறைந்த பல " ஹசரத் மார்கள் " ஆலிம்களின் புகைப்படம்கள் வைக்கப்பட்டு ,அவர்களை நன்றியோடு நினைவு படுத்தியது பலபேர்களின் கண்களில் நீர் வடிய வைத்தது .இதில் பலபேர்களின் புகைப்படங்கள் மிஸ்ஸிங் .ஏனோ தெரியவில்லை ? கேள்வி பதில் நிகழ்வில் "துபாய் ஈமான் " எப்போது ஆரம்பம் செய்யப்பட்டது ? என்ற கேள்விக்கு அரங்கு நிறைய மக்கள் இருந்தும் யாராலும் உடனடியாய் பதில் சொல்ல முடியவில்லை மிக தாமதமாகவே இதற்க்கு பதில் வந்தது 1978 என்று கேட்டு மகிழ்தேன் நான் .ஆமா 1978ம் ஆண்டுதான் துபாய் ஈமான் தொடங்கப்பட்டது .
அது இன்றுபோல் என்மனதில் பசுமையாய் நினைவில் உள்ளது அதன் முதல் தலைவர் திரு . முஹம்மது ஷாபி காக்க ,முதல் செயலாளர் திரு.அபூபக்கர் ஜின்னாஹ் ,முதல் இணை செயலாளர் நானாகிய பீர் முஹம்மது ,முதல் பொருளாளர் திரு .ஜமால் சார் ,இன்னும் ஆரம்பகால உறுப்பினர்கள் பலரை நேற்றைய நிகழ்வில் மேடைஏற்றி ,பேசவைத்து பரிசளிக்க செய்த விதம் எல்லோருக்கும் மன மகிழ்வை தந்தது "வேர்களை மறக்காத விழுதுகளை " நான் தனிப்பட்ட முறையில்லும், ஒரு சமுக ஆர்வலர் என்ற முறையிலும் விழா ஏற்ப்பாட்டளர்கலயும் ,ஈமானின் ஏர்வாடி பிரதி நிதிகளாய் செயலாற்றும் நண்பர்களையும் , "துபாய் ஈமான் " நிர்வாகிகளையும் உளமார பாராட்டி மகிழ்கிறேன். 1978ம் ஆண்டு ஈமானுக்காய் ஊன்றிய வித்து இன்று பூமியின் அடிநுனி வரை வேர்விட்டு விளைந்த பெருமரமாய் , விழுது விட்ட வளர்ந்த பெருமரமாய் நிர்ப்பது கண்டு விதை உண்ட்டியவர்களில் பலபெர்களில் நானும் ஒருவன் முறையில் மனம்மகிழ்ந்து இன்றைய நிர்வாகிகள் எல்லோரையும் பாராட்டி vaalthukiren .துபாய் ஈமான் அமைப்பை பார்த்துதான் இன்று மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் நமதூர் நண்பர்கள் அங்கெல்லாம் ஈமான் அமைப்பை அமைத்து செயல் படுகிறார்கள் துபாய் ஈமானில் யார் யாரெல்லாம் செயல் பட்டார்களோ அவர்களின் "வாரிசுகள் "இபோதைய ஈமானின். நிர்வாகிகளாக செயல்படுவதை பார்த்தேன் மகிழ்ச்சியாய் இருக்கு மொத்தத்தில் " ஈமானிய மொட்டுக்கள் " நிகழ்வு யாவும் மனதுக்கு இதம் தரகூடியதாய் இருந்தது.
நமதூரில் எத்தனை அமைப்புகள் உண்டோ, அத்தனை அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதுதான் " இந்த நிகழ்வின் வெற்றி " சாதாரண வெற்றியள்ள " "மாபெரும் வெற்றி "
அல்ஹம்துலிலாஹ் வாழ்த்துக்கள் விழா ஏற்ப்பட்டாலார்களே !!! ...
தொடரட்டும் ஈமானிய திருப்பணி ...
- மாத்தளை பீர் முஹம்மத்
|