Posted by S Peer Mohamed
(peer) on 12/7/2013 8:24:19 AM
|
|||
தென் தமிழகத்தில் உள்ள முருகன் கோவில் திருத்தலங்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூரும் ஒன்று. இது, வளர்ந்து வரும் நகரமும்கூட. திருநெல்வேலியிலிருந்து 45 கி.மீ தொலைவில் நாகர்கோவில் செல்லும் வழியில் உள்ளது ; தெற்கு கள்ளிகுளம் , ஏர்வாடி , முடவன்குளம் , சீலாத்திகுளம் , வடக்கன்குளம் , தேரை குளம் , வேப்பிலாங்குளம், வண்டலம்பாடு , அச்சம்பாடு , கும்பிலம்பாடு , முத்துனாடார் குடியிருப்பு , துறைகுடியிருப்பு , லெப்பகுடியுருப்பு , சமூகரெங்கபுரம், சவுந்திரபாண்டிபுரம் , பணகுடி , புளியங்குடி , காவல்கிணறு ஆகிய வட்டார மக்கள் எந்த சாமான் வாங்க வேண்டுமென்றாலும் வள்ளியூருக்குதான் வந்தாக வேண்டும் ; அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நமது ஊர் தொடர்பான இலக்கியங்கள், செவிவழிச் செய்திகள், நாட்டுப்புறப் பாடல்கள், புராணங்கள், வரலாறு, கல்வெட்டு, வாய்மொழி வழக்குகளில் உள்ள பல்வேறு செய்திகளின் விரிவான தொகுப்பாக சு. சண்முகசுந்தரம் அவர்கள் "வள்ளியூர் வரலாறு" என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார் ; ( பக்.503; ரூ.400; காவ்யா, சென்னை - 24) 044-2372 6882 இந்நூல் நூலாசிரியரின் கடின உழைப்பும், சுவைபடச் சொல்லும் விதமும், ஓர் ஊரின் பின்னணியில் இத்தனை சம்பவங்களும், செய்திகளும், வரலாறும் உள்ளனவா என்பதும் வாசிப்போரை வியக்க வைக்கின்றன. நூலில் பின்னிணைப்பாக ஐவர் ராசாக்கள் கதை, கன்னடியன் போர், வீணாதிவீணன் கதை, ஆந்திரமுடையார் கதை ஆகியவற்றின் கதைப் பாடல்கள் வடிவங்கள் முழுமையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அவை, வள்ளியூர் தொடர்பாக மேலும் ஆய்வு செய்ய முயல்வோருக்குப் பேருதவியாக இருக்கும். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |