Posted by Haja Mohideen
(Hajas) on 12/19/2013 12:42:12 PM
|
|||
வந்தான் வாழ்ந்தான் போனான் என்ற வகையில் நம்மில் அனைவரது வாழ்வும் சென்று கொண்டிருக்கிறது.
ஏர்வாடியின் பெயரை உலக சரித்திரத்தில் சொல்லும்படி யாராவது இருந்திருக்கிறார்களா? எத்தனைபேர் வாழ்ந்திருக்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை. ஆனால் சகோதரர் ஜின்னா கோடியில் ஒருவர். அவரது பெயர் அவரது சேவைகளால் உலகெங்கும் உள்ள பார்வையற்றவர்களாலும், அதைப்பற்றி தெரிந்துகொள்ளும் அனைவராலும் உச்சரிக்கப்படும். 'ஒவ்வொர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. பரீட்சைக்காக கெடுதியையும் நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர் நம்மிடமே நீங்கள் மீட்கப் படுவீர்கள்'. ( அல்குர்ஆன் 21:35) நாம் எதைக்கொண்டு சோதிக்கப்படுகிறோம் என்பதை அனைவரும் சிறிதாவது சிந்திப்போமாக. இறைவன் சகோதரர் ஜின்னா அவர்களின் மறுமையை சிறப்பானதாக ஆக்கிவைப்பானாக. அவனது நல்லடியார்கள் கூட்டத்தில் அவரையும் சேர்த்தருள்வானாக. சுவனபதியில் அல்லாஹ் அவருக்கு சிறப்பான இடத்தை கொடுத்தருள்வானாக. ஆமீன் ஏர்வாடியில் இவரைத் தெரியுமா? : S.M.A.ஜின்னா அவர்கள் இருளில் இருந்து வெளிச்சத்துக்கு!
1985-ம் ஆண்டு 400 சதுர அடியில், நான்கு பார்வையற்ற மாணவர்களைக்கொண்டு ஜின்னா என்பவரால் தொடங்கப்பட்டதுதான் 'இந்தியப் பார்வையற்றோர் சங்கம்’. இன்று 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 300 மாணவர்கள் தங்கிப் படிக்கும் வசதிகளுடன் கம்பீரமாக வளர்ந்து நிற்கிறது. 'பார்வையைத்தான் இழந்துள்ளோம். எங்கள் எண்ணங்களையும் சக்திகளையும் அல்ல...’ என்பதை நிரூபித்துவிட்டார்கள் மதுரை சுந்தர ராஜபுரத்தில் இருக்கும் இந்தியப் பார்வையற்றோர் சங்கத்தினர். இந்தச் சங்கத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட ஹாங்காங்கில் இருக்கும் 'ஹெல்ப் தி ப்ளைண்ட் ஃபவுண்டேஷன்’, மூன்று கோடி ரூபாயை அள்ளிக் கொடுக்க 18 ஆயிரம் சதுர அடியில் புதிதாக ஒரு மேல்நிலைப் பள்ளி கட்டி முடிக்கப்பட்டட்டுள்ளது. சமீபத்தில் நடந்த அதன் திறப்பு விழாவில்... ஹாங்காங்கைச் சேர்ந்த ஃபவுண்டேஷன் நிறுவனர் டி.கே. படேல் மற்றும் நித்தி படேல் ஆகியோர் 'வரலாற்றுப் பாதையில் ஐ.ஏ.பி.’ என்ற புத்தகத்தை வெளியிட்டார்கள். டி.கே.படேல் பேசும்போது, ''ஹாங்காங்கில் வாழும் இந்தியர்கள் உதவி செய்ததால் மட்டுமே இத்தகைய வெற்றி சாத்தியம் ஆயிற்று. நாங்கள் இதுவரை 25 பார்வையற்ற பட்டதாரிகளை உருவாக்கி உள்ளோம். தமிழகத்தின் பிரமுகர்கள் நிறையப் பேர் இந்த விழாவுக்கு வந்துள்ளார்கள். நான் அவர்களிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான். பார்வை இல்லாமல், பல்வேறு இடர்பாடுகளுக்கு நடுவில் தளராத முயற்சியுடன் படித்துப் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக் கொடுங்கள்'' என்றார். தொடர்ந்து தமிழகத்தில் பயிலும் 10 மற்றும் ப்ளஸ் டூ படிக்கும் பார்வையற்ற மாணவர்களுக்காக, பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம் ப்ரெய்லி முறையில் உருவாக்கிய கோனார் தமிழ் உரைப் புத்தகத்தை வெளியிட்டபோது, மாணவர்களிடையே பலத்த கரகோஷம். அமெரிக்காவின் நாசாவில் இருந்து வானவியல் பற்றிய புத்தகமும் ப்ரெய்லி முறையில் அச்சிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டு இருந்தது கூடுதல் ஆச்சர்யம். காமன்வெல்த் லீக் எஜுகேஷன் ஃபண்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஜூடித் பிஷேர், ''நாங்கள் இதுவரை 26 நாடுகளில் 400 பெண் குழந்தைகளைப் படிக்கவைத்து இருக்கிறோம். இப்போது மதுரையில் இந்தப் பள்ளியில் இருந்து 10 பெண் குழந்தைகளுக்கு உதவ முடிவு செய்து உள்ளோம். இந்தத் திட்டத்தின் மூலம் உலகின் பல்வேறு கலாசசாரங்களை இணைக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்றார். (என் விகடன்) |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |