Posted by Haja Mohideen
(Hajas) on 1/7/2014 10:33:50 PM
|
|||
மகாராஷ்டிராவில் எக்ஸ்பிரஸ் ரயில் தீ: 6 பேர் பலி
Posted by: Mathi Published: Wednesday, January 8, 2014, 8:33 [IST]
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த ரயில் தீ விபத்தில் 6 பயணிகள் உயிரிழந்தனர். மும்பை பந்த்ராவிலிருந்து நள்ளிரவு 12 மணியளவில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனுக்குப் புறப்பட்டுச் சென்ற ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2.15 மணியளவில் டகானு ரோடு நிலையத்தை கடந்த சில நிமிடங்களில், ரயிலின் 3 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. இதில் பயணிகள் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், பல பயணிகளுக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப்படையினர், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயில் தீ விபத்துக்கான காரணம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.\\\\ |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |