Posted by Mohamed Rafiq
(namaduoor) on 1/20/2014 10:45:47 AM
|
|||
ஏர்வாடியில் கத்திக்குத்து: இளைஞர் சாவு By திருநெல்வேலி First Published : 18 January 2014 05:41 AM IST திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடியில் ஏற்பட்ட தகராறில் வெள்ளிக்கிழமை இரவு கத்தியால் குத்தப்பட்ட இளைஞர் இறந்தார். ஏர்வாடியில் உள்ள 7-ம் தெருவைச் சேர்ந்த மீரான் மகன் அப்துல் அஜீஸ் (24). பிளஸ்-2 முடித்துள்ள இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் அப்துல் அஜீஸýக்கு கத்திக்குத்து விழுந்ததாம். பலத்த காயமடைந்த அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவர் இறந்தார். இது குறித்து ஏர்வாடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |