நெல்லை ஏர்வாடி: தீனியாத் போட்டிகள் & மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி. 17/01/2014 வெள்ளி,
நெல்லை ஏர்வாடி லெப்பை வளவு ஜமாத்தார்கள் மற்றும் லெப்பை வளவு இஸ்லாமிய நூலகம் இணைந்து நடத்திய, மக்தப் மத்ரஸா மாணவ, மாணவியர்கான கிராஅத், சூரா மனனம், பேச்சு, இஸ்லாமிய கீதங்கள் போன்ற தீனியாத் போட்டிகள் லெப்பை வளவு முகைதீன் பள்ளி ஈத்கா திடலில் வெகு சிறப்பாக நடைபெற்றது. தீனியாத் போட்டிகள் அஸருக்குப் பின் தொடங்கி மஃரிப் வரை நடைபெற்றது. போட்டியாளர்கள் மிகச் சிறப்பாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். லெப்பை வளவு மெளலவி அல்-ஹாஃபிழ், அல்-காரீ ரஃபீக் அஹ்மது ஆலிம் தாவூதி அவர்கள் நடுவராகப் பணியாற்றினார்கள். மஃரிபுக்கு பின் மார்க்கச் சொற்ப்பொழிவு நிகழ்ச்சி தொடங்கியது. லெப்பை வளவு ஜமாத்தின் முன்னாள் முத்தவல்லி ஜனாப் காதர் மீராசாகிபு அவர்கள் தலைமை தாங்கினார்கள். ஜமாத்தின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். லெப்பை வளவு ஜும்ஆ பள்ளிவாசலின் இமாம் மரியாதைக்குறிய மெளலவி முஹைதீன் அப்துல் காதிர் ஆலிம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். துவக்கமாக லெப்பை வளவு சகோதரர் உதுமான் தெளஃபீக் அவர்கள் ”கல்வி மற்றும் வாசிப்பின் அவசியம்” எனும் தலைப்பில் அழகிய முறையில் உரையாற்றினார்.
அதைத் தொடர்ந்து ஏர்வாடி பெண்கள் அறிவகத்தின் ஆசிரியை சகோதரி ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் ஆலிமா அவர்கள், “நபி [ஸல்] அவர்கள் விரும்பிய பெண்கள் சமூகம்” எனும் தலைப்பிலும், லெப்பை வளவு மெளலவி ஸலாஹுத்தீன் ரிஃபாய் உஸ்மானி அவர்கள் “இதுதான் நேர்வழி” எனும் தலைப்பிலும், பின்னர் லெப்பை வளவு மெளலவி அல்-ஹாஃபிழ், அல்-காரீ ரஃபீக் அஹ்மது ஆலிம் தாவூதி அவர்கள் “முஸ்லிம்கள் அன்றும் இன்றும்” எனும் தலைப்பிலும் சிறப்புறையாற்றினார்கள். தீனியாத் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டதோடு, நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்களுக்கு பொன்னாடைகள் போர்த்தி கவுரவிக்கப்பட்டது. லெப்பை வளவு சகோதரர் அஹ்மது ஆலிம் அவர்கள் நிகழ்ச்சியை மிக நேர்த்தியாக தொகுத்து வழங்கியதோடு இறுதியில், கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஆண்களும், பெண்களும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர். குறிப்பாக லெப்பை வளவு இஸ்லாமிய நூலகத்தின் இளைஞர்கள் அனைத்து ஏற்ப்பாடுகளையும் மிக அற்ப்புதமாகச் செய்திருந்தனர். அவர்களின் இப்பணி மிகவும் பாராட்டுதலுக்குறியது. அல்லாஹ் அவர்களுக்கு நிறைவான கூலியை வழங்குவானாக…! ஆமீன்.
நன்றி : முகநூல்
|