Posted by Haja Mohideen
(Hajas) on 1/25/2014 1:46:46 AM
|
|||
பேரூந்து நிலையம் அமைக்க 2 கோடி ரூபாய்க்கும் மேலான இடம் தானம்
பல்லாண்டு காலமாக ஏர்வாடியில் ஒரு வசதியான பேரூந்து நிலையம் இல்லாமல் அவதிப்பட்ட அனைத்து மக்களுக்கும் , மறைந்த முன்னாள் ஏர்வாடி பேரூராட்சி தலைவர் கோ ஆனா மீரான் அவர்களது மகன் அலியப்பா அவர்கள், திருக்குறுங்குடி பத்திர பதிவு அலுவலகத்தில் 2 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள, ஏர்வாடியின் இதயப்பகுதியில் அமைந்த 28 செண்ட் நிலத்தை தானமாக 24-01-2014 அன்று பத்திரபதிவு செய்து கொடுத்தார். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும்- இறைவன் இவ்வுலகிலும் மறு உலகிலும் சகல செளபாக்கியங்களையும் வழங்கி அருளட்டும். இந்நிகழ்ச்சியில் அலியப்பாவின் சகோதரர்கள் அலிமலிக், அப்துல்காதர் முதலியோரும்,ஏர்வாடியின் முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் இப்ராஹின் ஷா, மற்றும் இந்நாள் பேரூராட்சி உறுப்பினர்கள் மாஹீன், அய்யூப்கான், கிட்டு, ஏ சி பீர்,முத்து மற்றும் அரசு ஒப்பந்த்ததாரர் ராசி மீரான் முதலியோர் பங்கேற்றனர். பேருதவி புரிந்தவர் -இறைவா இவர்களுக்கு நீ உதவி புரிவாய் நிறைவான வாழ்க்கையும் நீடிய ஆயுளும் நிரம்பவே அளிப்பாய் மனமார வேண்டுகிறோம் மகிழ்ச்சியோடு கை ஏந்துகிறோம். மறைந்த முன்னாள் பேரூராட்சி தலைவர் கோ அ மீரான் அவர்களது புதல்வர் அலியப்பா அவர்களை , ஏர்வாடி பேரூராட்சிக்கும் அதன் சுற்றுவட்டார மக்களுக்கும் பேரூந்து நிலையம் அமைக்க , ஏர்வாடி நகரின் மையப்பகுதியில் பெருமதிப்புள்ள 28 செண்ட் நிலத்தை தானமாக வழங்கிய , இன்று 24-01-2014 நடைபெற்ற பேரூராட்சி கூட்டத்தில் , பேரூராட்சி உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்தி பாராட்டினார்கள். நில பத்திரபதிவு https://www.facebook.com/groups/baithussalam/permalink/593404317394956/?stream_ref=8
பேரூராட்சி பாராட்டு https://www.facebook.com/groups/baithussalam/permalink/593403650728356/?stream_ref=2
தினகரன் செய்தி https://www.facebook.com/groups/baithussalam/permalink/593670974034957/?stream_ref=2
மாத்தளை பீர்பாய் பாராட்டு https://www.facebook.com/groups/baithussalam/permalink/593681597367228/?stream_ref=2
தினமணி செய்தி https://www.facebook.com/groups/baithussalam/permalink/593312580737463/?stream_ref=2 Thanks to : Facebook பைத்துஸ்ஸலாம் ஏர்வாடி& S.I.Sultan
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |