Posted by Haja Mohideen
(Hajas) on 1/25/2014 9:00:59 AM
|
|||
தற்போதைய பஸ் நிறுத்துமிடத்தை இலவசமாக அளித்தவர்
இவரை தெரிகிறதா ?
தடி சாஹிப் என்று செல்லமாக அழைக்கப்பட்ட SKSA.KADER MEERA SAHIB. எஸ் கே எஸ் ஏ மீரானின் தகப்பனார். சமுதாய தலைவர்கள் இவரை பெரிதும் மதித்தனர் . தற்போது எல்லோரும் தேடிபோகிற திருக்குறுங்குடி ஜீயர் சாமி இவரை தேடி இவர் வீட்டுக்கு வருவார் . சிறு வயதில் தந்தையை இழந்த போதும் தன் 5 தங்கைகள் திருமணத்தை தலா 100 பவுன் நகை போட்டு தந்தையின் திரண்ட சொத்துக்களை தங்கைகளுக்கு எழுதிகொடுத்து சகோதரனின் கடமையை செய்தவர் . பட்டத்து யானை போன்ற கம்பீர தோற்டம் மிக்கவர் . டாகீஸ்கள் நடத்தியவர் . தனது 48 வயதில் புகழோடு மறைந்தார் . இன்னும் 50 ஆண்டு கழித்து பூமி தானம் செய்த தம்பி அலியப்பாவயும் இப்படி யாராவது
நம் நண்பர், மீரானின் சகோதரர் பெயர்; பீர். இப்போது நடுமுஹல்லத்தில் பொறுப்பில் இருக்கிறார். செஹ்கல் மெசின் டூல்ஸ் மும்பையில் நல்ல பதவியில் இருந்தவர்.
Meeran Alisheik SKSA.KADER MEERA SAHIB
Alimalick Peer MohamedMeeran Alisheik நீங்கள் முதலில் பதிந்த பதிவையே எடிட் செய்யலாம். எத்தனை முறை வேண்டுமானாலும். கடைசி பதிவு மட்டும் தான் தெரியும். எடிடெட் என்பதை அழுத்தி, தங்களின் முன் பதிவுகளையும் பார்க்கலாம்.
Peer Mohamedஇவர் நமதூரில் பெரும் நிலசுவந்தராக வாழ்ந்தவர் புளியகுறிச்சியில் ஏராளமான நிலம் கிணறு தோட்டம் என்று ஒரு பண்ணை வீடு இருந்தது நமதூர் சுற்றுப்புறங்களில் அணைத்து இன மக்களாலும் மதிக்கப் பட்டவர்
நமதூரில் ' ராஜ தேட்டர் ' சினிமா கொட்டகை அந்தகாலத்தில் நடத்தியவர்
இவரின் இயர்ப் பெயர் எஸ் கே எஸ் எ காதர் மீரா சாஹிப் ' தடி சாஹிப் ' என்றால்தான் எல்லோருக்கும் தெரியும் இவர் எனது நண்பர் ' அலி சேக் மீரானின் தாய் மாமா '
Si Sulthanஎஸ் ஏ கே சித்தீக்குக்கும் தாய் மாமா.
Sms Rowtherஇவர் அண்ணனா தம்பியா இரண்டு பேர்களில்
Hameed Hamsha MAவடுகச்சிமதில் பத்தில் இவரது வயலுக்கு குளத்தில் இருந்து தண்ணீர் பாய்கின்றது என்றால் ,பத்து நாட்களுக்கு வேறு யாரும் குளத்து மடை பக்கம் போக மாட்டார்களாம் .அவ்வளவு நிலங்கள் இருந்ததாக சொல்வார்கள் .
Meeran Alisheikஇவர்குடும்பத்தில் சகோதரர்கள் 3 பேர் , சகோதரிகள் 8 பேர். அந்த குடும்பத்தில் என் தாயார் 11 பேரில் 9 தாவதாக பிறந்தவர் .sksa . சாஹிப் அவர்களின் தந்தை 1920 ல் ஹாபிஸ் பட்டம் பெற்ற மார்க்க அறிஞர் அவரது பெயர் அசன் மீரான் .தூத்துக்குடியில் பெரும் வணிகராக திகழ்ந்தவர் .
Si Sulthanஇன்றும் வடுகச்சிமதில், புலியூர்குறிச்சி, மஞ்சங்குளம், நான்குநேரி,டோனாவூர் பகுதி மக்கள் இவரது பெருந்தன்மையையும், வீரத்தையும் புகழாக பேசுகிறார்கள்.
Masoor Salahudeenஒரு சிறிய திருத்தம் செய்துகொள்ளும்படி மீரான் அவர்களை கேட்டுக்கொள்கிறேன். தற்போதுள்ள பயணிகள் தங்கும் இடம் (Bus Stand) SKSA காதர் மீராசாஹிபு அவர்கள், மூஸி அகமது முகைதீன் அவர்கள், தென்காஞ்சர் முகம்மது முகைதீன் அவர்கள் இந்த மூவரும் கூட்டாக சேர்ந்து மக்கள் நலம் கருதி இலவசமாக அளித்துள்ளார்கள். அதற்கான ஆதாரம் கட்டிடத்திலேயே கல்வெட்டாக இருக்கிறது .
நன்றி : முகநூல்
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |