ஏர்வாடி, : ஏர்வாடியில் அரசு பஸ்சை தமுமுகவினர் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாகர்கோவில் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு 8 மணிக்கு ஏர்வாடி வழியாக செல்லக்கூடிய ராமேஸ்வரம் பஸ் புறப்பட தயாராக நின்றது. அப் போது ஏர்வாடி 7ம் தெரு வை சேர்ந்த சேக் சிந்தாமதார், ஏர்வாடி வடக்கு மெயின் ரோட்டை சேர்ந்த சிங் டெய்லர் மற்றும் ஏர்வாடியைச் சேர்ந்த 4 பெண் கள் உட்பட 10 பேருக்கும் மேற்பட்டோர் பஸ்சில் ஏறினர். அப்போது கண்டக்டர் சீதாராமன் ஏர்வாடிக்கு பஸ் போகாது என்று கூறி அனைவரையும் இறக்கி விட்டார். இதில் சேக் சிந்தாமதார் மற்றும் சிங் டெய் லர் இருவரும் வள்ளியூருக்கு டிக்கெட் எடுத்து அதே பஸ்சில் பயணம் செய்தனர். அப்போது அவர்கள் கண்டக்டரிடம் இருவரும் ஏர்வாடி செல்லும் வண்டி தானே இது, ஏன் ஏர்வாடி செல்லாமல் போகிறது என்று கேட்டனர். அதன்பிறகு வள்ளியூர் டிக்கெட்டிலேயே ஏர்வாடியில் இறங்கி கொள்ளுமாறு கூறினார். இதுகுறித்து ஏர்வாடி மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ஏர்வாடி பேரூராட்சி துணைத் தலை வர் ஏசிபீர் மற்றும் மனித நேய மக்கள் கட்சி நிர்வாகி கள் ஏர்வாடி வந்த அந்த பஸ்சை முற்றுகையிட்டனர். தகவலறிந்த ஏர்வாடி சப்-இன்ஸ்பெக்டர் சோபனா ஜாய் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி, பஸ்கள் ஏர்வாடியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்துவதாக தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்ற னர். இதனால் ஏர்வாடியில் பரபரப்பு ஏற்பட்டது.
|