பாரத ஸ்டேட் வங்கி ப்ரபேஷனரி அதிகாரி (Probationary Officer) பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு
வயது வரம்பு: 30 வயது. பிற்படுத்தப்பட்ட, எஸ்.சி. /எஸ்.டி போன்ற பிரிவினருக்கான மத்திய அரசின் வயது வரம்புச் சலுகைகள் பின்பற்றப்படும்.
பணியிடங்கள்: மொத்தம் :1837, எஸ்.சி. : 235, எஸ்.டி.: 439, ஓ.பி.சி.: 405, பொதுப்பிரிவு: 758
விண்ணப்பக் கட்டணம்:
பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் 10-04-2014 to 28-04-2014 தேதிகளுக்குள் விண்ணப்பக் கட்டணமான 500 ரூபாயை நேரடியாகச் செலுத்தலாம். இணையத்தின் மூலம் 07-04-2014 to 25-04-2014 தேதிகளுக்குள் செலுத்தலாம். எஸ்.சி./எஸ்.டி./மாற்றுத் திறனாளிகளுக்குக் கட்டணம் ரூ 100 ஆகும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
எழுத்துத் தேர்வு, கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
www.statebankofindia.com என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
பொறியியல் பட்டதாரிகளுக்கு மத்திய அரசுப் பணி
மத்திய அரசின் பல்வேறு விதமான பணிகளில் பணியாற்ற பொறியில் பட்டதாரிகளிடம் இருந்து யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் விண்ணப்பங்களை எதிர்பார்க்கிறது.
கல்வித் தகுதி: சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிகேசன் ஆகிய பிரிவுகளில் ஏதெனும் ஒன்றில் பொறியியல் பட்டம்
வயது வரம்பு: 30 வயது. பிற்படுத்தப்பட்ட, எஸ்.சி. /எஸ்.டி போன்ற பிரிவினருக்கான மத்திய அரசின் வயது வரம்புச் சலுகைகள் பின்பற்றப்படும்.
பணியிடங்கள்: 582
விண்ணப்பக் கட்டணம்:
பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் விண்ணப்பக் கட்டணம் 200 ரூபாயை நேரடியாகச் செலுத்தலாம். இணையத்தின் மூலம் செலுத்தலாம். எஸ்.சி./எஸ்.டி./மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்குக் கட்டணவிலக்கு அளிக்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
http://www.upsconline.nic.in/mainmenu2.php என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.