ஏர்வாடி, :ஏர்வாடியில் மமக அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த 21 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய் தனர். நெல்லை மாவட்டம் ஏர்வாடி மமக அலுவலகத்தில் அக்கட்சியின் ஏர்வாடி தலைவர் பக்ருதீன் அலி அகமது, முன்னாள் மாவட்ட மமக துணை செயலாளர் முகைதீன், ஏர்வாடி தமுமுக செயலாளர் ரியாஸ், 15வது வார்டு கிளை தலைவர் டிஸ்கோ முகைதீன், மமக நகர துணைச் செயலாளர் பீர்முகம்மது ஆகியோர் நேற்று முன்தினம் பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர்கள் மாயமான செல் போன் தொடர்பாக மமக தலைவர் பக்ருதீனிடம் கேட்டனர். அதற்கு மமக தலைவர் விசாரித்து வாங்கி தருவதாக கூறினார். இதில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். மமகவினரும் பதிலுக்கு தாக்குதல் நடத்தினர். இதில் மமக அலுவலகத்தில் உள்ள சேர் மற்றும் ஸ்பீக்கர் பாக்ஸ் போன் றவை அடித்து நொறுக்கப்பட்டன. நாங்குநேரி டிஎஸ்பி சண்முகம், ஏர்வாடி எஸ்ஐ சோபனாஜாய் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக மமகவினர் அளித்த புகாரின்பேரில் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த இஜாஸ் அகமது, ஹசன் அப்துல்காதர், ஷரீப் உமர், ஷாமூ சகாப்தீன் உட்பட 21 பேர் மீது ஏர்வாடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
|