Posted by Haja Mohideen
(Hajas) on 5/3/2014 1:55:32 AM
|
|||
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளன.
சென்னை: பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளன.
இதுகுறித்து அரசு தேர்வு இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளன.
தேர்வர்கள் தங்களது பிறந்த தேதியைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
முடிவுகள் வெளியாகும் இணையதள முகவரிகள்:
இவற்றில் www.dge1.tn.nic.inஎன்ற இணையதள முகவரி ஸ்மார்ட் போன் மூலம் தேர்வர்கள் எளிதாக தேர்வு முடிவுகளை அறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவுகள்:
மாணவர்கள் எஸ்.எம்.எஸ். மூலமும் தேர்வு முடிவுகளை மே 9-ஆம் தேதி காலை 10 மணி முதல் அறிந்து கொள்ளலாம்.
அதற்காக 09282232585 என்ற எண்ணுக்கு கீழ்க்காணும் வகையில் எஸ்.எம்.எஸ். செய்ய வேண்டும்.
TNBOARD<space><Register No><DOB in DD/MM/YYYY> என்ற அடிப்படையில் எஸ்.எம்.எஸ். செய்யலாம்.
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம என அறிவிக்கப்பட்டுள்ளது |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |