Posted by Haja Mohideen
(Hajas) on 5/27/2014 1:05:59 PM
|
|||
வெற்றி செல்லாது. ஆதாரத்துடன் அம்பலம்!பி.ஜே.பி வெட்பாளர்கள் வெற்றி பெற்ற சதியின் வீடியோ ஆதாரங்களை (Video 1 Video 2) டிவி சேனல்கள் வெளியிட்டு இருந்தது. தேர்தல் ஆணையம் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் மோடி வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்ற சதியின் ரகசியம் தற்போது வெளியாகியுள்ளது. வாரணாசியில் தேர்தல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட அரசு அதிகாரியான அவதேஷ் குமார் ஸ்ரீவாஸ்தவா, மற்றும் அவரது மகனும் பொறியியல் மாணவருமான கெளரவ் ஆகியோருக்கு எதிராக தற்போது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. காரணம்: தேர்தல் அதிகாரி ஸ்ரீவாஸ்தவா வாக்கு பதிவு இயந்தரிரங்களை தனது வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். ஒன்றிரண்டு அல்ல பல இயந்திரங்களை எடுத்து சென்றுள்ளார். வீட்டில் உள்ள இயந்திரங்களுடன் அவரது மகன் கெளரவ் படம் எடுத்துக் கொண்டுள்ளார். அதை அவரது facebook பக்கதில் அப்லோடு செய்துவிட்டார். இதை தொடர்ந்து வாக்கு பதிவு எந்திரங்கள் தேர்தல் அதிகாரி ஸ்ரீவாஸ்தவா வீட்டில் இருக்கும் தகவல் facebook மூலம் பரவியது. மேலும் பரவாமல் இருக்க இந்த facebook account உடன் delete செய்யப்பட்டு விட்டது. அந்த புகைப்படத்தை வெளியிட்ட தேர்தல் அதிகாரி மகன் “ஆப் கி பார் மோடி சர்க்கார்” என்ற வாசகத்தையும் அத்துடன் சேர்த்து வெளியிட்டுள்ளார். பிரத்யேக அறையில் அதீத முறையில் பாதுகாக்கப்பட வேண்டிய வாக்கு பதிவு இயந்திரங்களை வீட்டிற்கு சர்வ சாதாரணமாக எடுத்து சென்றுள்ளனர். மோடிக்கு ஆதரவான இந்த ஒரு தேர்தல் அதிகாரியின் செயல் அவரது மகன் புகைப்படத்தை வெளியிட்டதால் தெரியவந்துள்ளது. வாரணாசியில் இது போன்று எத்தனை அதிகாரிகள் எத்தனை இயந்திரங்களை வீட்டிற்கு எடுத்து சென்று எத்தனை ஓட்டுக்களை குத்தினார்கள் என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம். “ஆப் கி பார் மோடி சர்க்கார்” என்ற வாசகத்துடன் வாக்கு பதிவு இயந்திரத்தின் புகைப்படம் அப்லோடு செய்யப்பட்டிருப்பதால் இது மோடிக்கு ஆதரவான தேர்தல் அதிகாரி மோடியை வெற்றி பெறச் செய்ய நிகழ்த்திய சதி என்பதை தெளிவாக பொதுமக்கள் புரிந்து கொண்டார்கள். பகிரங்கமாக மோடிக்கு ஆதரவாக வாக்கு இயந்திரத்தை வீட்டிற்கு எடுத்த சென்ற தேர்தல் அதிகாரிகளை இதுவரை கைது செய்யாமல் பெயருக்கு வெறும் வழக்கு மட்டும் போட்டுள்ளது தேர்தல் ஆனையம். வாராணிசில் இவ்வாறு ஓடடு இயந்திரங்களை வீட்டி்றகு எடுத்து சென்று சதி செய்யப்பட்டுள்ளது என்பதை மேலும் உறுதிப்படுத்தவும் விதமாக மற்றுமோ செய்தி அமைந்துள்ளது. வாராணிசியல் பதிவான ஓட்டுக்களின் எண்ணிக்கையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணை இணையதளத்தில் வெளியிட்டுள்ள கணக்கு : 1030685 ஓட்டுக்கள் ஆதாரம் பார்க்க: http://eciresults.nic.in/ConstituencywiseS2477.htm?ac=77 ஆனால் உபி தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கணக்கு: 1028763 ஒட்டுக்கள் ஆதாரம் பார்க்க : http://ceouttarpradesh.nic.in/GE2014/VoterTurnout.pdf இதில் 1922 ஓட்டுக்கள் வித்தியாசம் வருகின்றது. வித்தியாசம் சிறியதாக இருந்தாலும் சில வேட்பாளர்கள் இந்த தேர்தில் வெறும் 26 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது அனைவரும் அறிந்ததே.
மேலும் தேர்தல் ஆணையத்தின் நம்பிக்கை தன்மையும் தற்போது கேள்விக்குரியாகியுள்ளது. வாரணாசியில் மோடி பெற்ற வாக்குகள் பொதுமக்கள் குத்தியது அல்ல மாறாக தேர்தல் அதிகாரிகள் சகட்டு மேனிக்கு வீட்டில் குத்தியது என பொதுமக்கள் தற்போது புரிந்து கொண்டார்கள். http://www.appadiaa.com/varanasi-poll-official-takes-evms-home/ |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |