Posted by Haja Mohideen
(Hajas) on 6/3/2014 10:37:42 AM
|
|||
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்க"மாம்".....!!! வாசித்து தெரிந்து கொள்ளவும். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுள்ளாஹி வபரகாதுஹு. பெண்களை அடிமைப் படுத்துவதாகவும், தீவிரவாதத்தை போதிப்பதாகவும் கடந்த 2 தசாப்தங்களாக விமர்சிக்கப்படும் ஒரு மதத்தை (இஸ்லாத்தை) இன்று உலகெங்கும் உள்ள பலரும் ஏற்றுக்கொள்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும். அது ஏன்??? என்ற கேள்விக்கு விடை தேடினால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்ற நோக்கில் இந்த கட்டுரை எழுதப்படுகிறது. கட்டுரையை ஆரம்பிக்க முன்னர், இந்த போட்டோவில் இலக்கமிடப்பட்டுள்ள பெண்களை யார் என்று அறிந்துகொள்வோம். இன் ஷா அள்ளாஹ். 01: யுவான் ரிட்லி எனும் செய்தியாளர். இவர் ஆப்கானை அமெரிக்கா ஆக்கிரமித்த போது, செய்தி சேகரிப்பதற்காக மிகத்தந்திரமாக ஆப்கானுக்குள் ஊடுரிவிய போது தலிபாஙளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். தலிபாஙளின் ஒழுக்கத்தை நேரில் கண்ட இவர், தலிபாஙளை பற்றி மீடியா சொல்லும் பொய்களை அம்பலப்படுத்திவிட்டு, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்... 02: ஏறத்தாழ 10 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்களை கொலை செய்த அமெரிக்க முன்னாள் அதிபரின் மகள் "ஜென்னா புஷ் ஹாகர்"... 03: பிரிட்டனின் பிரபல மொடல் அழகியாக இருந்த "காமில்லா லேலன்ட்"... 04: இவரும் பிரிட்டனின் பிரபல மொடல் அழகியாக இருந்தவர். "கார்லீ வட்ஸ்"... 05: பிரான்ஸ் நாட்டு பிரபல பாடகி "டயம் மெலானீ"... 06: நேபாள முன்னணி நடிகை "பூஜா லாமா"... 07: ரஷ்யாவைச்சேர்ந்த மொடல் அழகி "மஷா அலலிகினா"... 08: முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி ப்ளயரின் மைத்துனி "லாரன் பூத்"... 09: இப்போது பரபரப்பாக பேசப்படும் இந்திய நடிகை மோனிகா எனும் "ரஹீமா"... இப்போது கட்டுரைக்கு வருவோம்.... கடந்த பல வருடங்களாக இஸ்லாம் பற்றி விமர்சிக்காத ஊடகங்களே இல்லையென சொல்லமுடியும். அந்தளவுக்கு அவதூறுகளை சந்தித்தும், முன்னேறி வருகிறது. பொதுவாக இஸ்லாம் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு என்னவெனில், அது பெண்கள் பற்றிய தலைப்பு தான். அதோடு சேர்ந்து தீவிரவாதம் என்ற சொல்லையும் சேர்த்துக்கொள்வதுண்டு. முஹம்மது நபி(ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்னர், இன்றைய நாகரீகவாதிகள்! என்று தம்மை சொல்லிக்கொள்வோர் இஸ்லாத்தின் வளர்ச்சி மீதுள்ள பொறாமையை தாங்க முடியாமல், பெண்களை அடிமைப்படுத்துகிறது என்ற அதே தலைப்பை தான் எடுத்து வைக்கிறார்கள். முக்கியமாக முஸ்லிம் பெண்களின் ஆடைகளை விமர்சித்து, சுதந்திரம் பெற்றுத்தருவதாக கூப்பாடு போடுகிறார்கள். (முகத்தை மூடுமாறு இஸ்லாம் சொல்லவில்லை. அது அரேபிய கலாச்சாரம் மட்டுமே) #ஆணும் பெண்ணும் சமன் என்ற ஒரு கோட்பாட்டை சொல்கிறார்கள். ஆனால், அது முற்றிலும் தவறாகும். ஆணும் பெண்ணும் சமன் எனில்.... இப்படி "ஆணும் பெண்ணும் சமன்" என்ற ஒரு கபடத்தனமான கருத்தை பரப்புவதன் மூலம், ஒழுக்கமாக வாழ்ந்த பெண் இனத்தை #அவிழ்த்துக்காட்டும் நிலைக்கு கொண்டுவந்தவர்கள் யாரெனில் இந்த நவ நாகரீகவாதிகள்! தான். பெண்கள் ஒழுக்கமாக இருந்தால் தனது #வியாபாரத்திற்கு பாவிக்க முடியாது என்பதால், அவர்களை நாகரீக பெண்களாக உசுப்பேற்றிவிட்டு, அவிழ்த்துக்காட்ட வைத்து, சினிமா வியாபாரத்தில் விற்றார்கள். இன்னும் அனைத்து விளம்பரங்களிலும் பெண்களை காட்டி விற்கிறார்கள். ஒரு பொருளை விளம்பரப்படுத்த எதற்கு பெண்ணை காட்ட வேண்டும்??? இந்தளவுக்கு இஸ்லாம் மீது அவதூறு பரப்பி, போதாக்குறைக்கு #வாளால் பரப்பியதாகவும் புரளி கிளப்பி விட்டு அதன் வளர்ச்சியை தடுக்க நினைப்பவர்களுக்கு உண்மையில் #வெட்கம் இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. * இவ்வாறு அவதூற்றுக்கு உள்ளாகியும், இதே மதத்தை பெண்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால், #கொஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞம் நிதானமாக யோசிக்க வேண்டும். இஸ்லாத்தின் எதிரிகளால் வர்ணிக்கப்பட்டவாறு இஸ்லாம் பெண்களை அடிமைபடுத்தவில்லை என்று #10000000% உறுதியாகிறது. தன் குடும்ப பெண்களுக்கான (தாய், மனைவி, மகள், சகோதரி) செலவுகளுக்கு ஆண்கள் தான் பொறுப்பாளிகள் என்று கூறி பெண்களை கண்ணியப்படுத்திய மதம் உலகில் #இஸ்லாம் மட்டுமே.... எதிரிகள் என்ன தான் சூழ்ச்சி செய்தாலும் அவர்களால் இறைவனை வெல்லவே முடியாது. தாயை விட அள்ளாஹ் 70 மடங்கு அன்பு கொண்டவன் என்பதால் தான், இஸ்லாத்தின் எதிரிகளை தண்டிக்காமல் அவர்கள் உண்மையை ஏற்று திருந்தும் வரை இன்னும் விட்டு வைத்துள்ளான். [அல் குர்'ஆன் 14:42] எனவே இவர்கள் திருந்துவதற்கான அவகாசத்தை இறைவன் வழங்கியே இருக்கிறான். உலகின் அனைத்து மதங்களும் தினமும் வீழ்ச்சியடைந்து கொண்டு இருப்பதாக #புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை இஸ்லாம் வளர்ச்சியடைவதாக டீவீ செய்திகள் கூட சொல்கின்றன. இலங்கையில் இஸ்லாம் மதத்திற்கு இந்துக்கள் பெருமளவில் மாறுவதாகவும், அதை சட்ட ரீதியாக தடை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து இந்து அமைப்பொன்று அண்மையில் கொழும்பில் ஒரு ஆர்ப்பாட்டம் செய்தது. அதில் வேடிக்கையாக #பொதுபலசேனா எனும் பெளத்த அமைப்பும் இணைந்துகொண்டது. ******** [அல் குர்'ஆன் 9:32] யா அள்ளாஹ்! என் கருத்துக்களில் தவறேதும் இருந்தால் சுட்டிக்காட்டவும். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |