Posted by Haja Mohideen
(Hajas) on 6/7/2014 6:08:26 AM
|
|||
by : Omar Salahudeen நமது ஊரின் அடையாளம் என்று சொன்னால் ஒன்று சமோசா இன்னொன்று ஊசி பொத்தை. பார்க்க மிகவும் விநோதமாக இருக்கும் இறைவனின் படைப்பில் ஊசி பொத்தை ஒன்று , இந்த பொத்தை பற்றி நிறைய தவறான தகவல் நம்மில் சில பேருக்கு உண்டு. அது ஒரு எரிமலை என்றும் , மேலே மிக பெரிய காடு உள்ளதாகவும் ஒரு வதந்தி , கேப்டன் நடித்த திருமூர்த்தி என்ற படத்தின் இறுதி காட்சியில் கதாநாயகன் ஹெலிகோப்டேரில் ஊசி பொத்தை மேல் இறங்குவார் அதன் பின்பு அங்கு மிக பெரிய காடு ஒன்றினுள் போவது போல காட்சி அமைக்க பட்டிருக்கும் இதனை ஆராயவே நானும் 4 தெரு முனையில் மாவு மில் வைத்திருக்கும் அன்பு நண்பர் சேக்கும் அதை ஏறி பார்த்துவிடுவது என்று முடிவு செய்தோம் . 1996 ஆண்டு நாள் மாதம் சரியாக நினைவில்லை அன்று லெப்பை வளவு தெருவுக்கும் புதுக்குடி அணிகளுக்கும் இடையில் கிரிக்கெட் பந்தயம் மதியம் நடந்து கொண்டு இருந்தது மதிய சாப்பட்டை முடித்துக்கொண்டு கிரிக்கெட் பந்தயத்தில் பங்குபெறாமல் ஊசி பொதயை நோக்கி கிளம்பினோம், என்னுடய சைக்கிள் HERCULES ROCK SHOCK அவருடைய சைக்கிள் HERCULES MTB , எல்லாம் ரேஞ்சுர் மாடல் சைக்கிள் , TVS கேட் பக்கத்தில் சென்று நிறுத்தி ஒரு சின்ன ஆய்வை செய்தோம் , எந்த பக்கத்தோடு ஏறுவது என்று முடிவு செய்துவிட்டு பொதையின் அடிவாரத்தை அடைந்தோம் , சைக்கிள் பூட்டி விட்டு இரு பாறைகளுக்கு நடுவில் போட்டுவிட்டு ஏற துவங்கினோம் , நல்ல வெயில் , சுமார் 13:30 ஏற ஆரம்பித்தோம் வழியில் எல்லாம் கள்ளிசெடியின் முட்களால் பதம் பார்கபட்டோம் காரணம் சில இடங்களில் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை , ஒரு கணம் நான் சேக்கிடம் போதும் திரும்பி போய்விடலாம் என்று சொன்னேன் ஆனால் அவர் மேலே போவதில் குறியாக இருந்தார் நானும் மனதை திடமாக்கிகொண்டு ஏற ஆரம்பித்தேன் இறுதியில் 15:45 மணிக்கு உச்சிக்கு சென்று விட்டோம் . இரட்டிப்பு மகிழ்ச்சி , நாங்கள் அணிந்திருந்த சட்டை சாரம் சற்று ஆங்ஆங்க கிழிந்து இருந்ததை உச்சிக்கு சென்றவுடன்தான் கவனித்தோம் , ஆனால் மேலே சென்று பார்த்த காட்சிகள் மறக்கமுடியாதவை , நமது களத்து மேடு போல ஒரு அளவுள்ள பகுதி ஒரு பகுதியில் மட்டும் கொஞ்சம் பாறைகள் குமிந்து இருந்தன ,ஆடுகள் மேய்ந்து கொண்டு இருந்தன , ஓமம் வாசனை , பலத்த காற்று , சுற்றி உள்ள அத்தனை ஊர்கள் கடல் வரை ஒரு குறிப்பிட்ட தூரம் வரைதான் நம்மால் வெறும் கண்ணால் காண முடிந்தது, அதற்கு பின்பு எல்லாம் வெள்ளையாகவே தெரிந்தது , சரி கீழே இறங்கலாம் என்று முடிவு செய்து இறங்க முற்பட்டபோது வழியை மறந்துவிட்டோம் எங்கு சென்று நோக்கினாலும் நேர் கீழே இறங்க முடியாத பாதை , சற்று பயம் அதிகரித்தது , லுனர்ஸ் செருப்பில் காலின் அடிபாகம் வேர்க்க ஆரம்பித்துவிட்டது , இன்று நினைத்தாலும் குலைநடுங்கும் அனுபவம், உச்சியில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருவரும் ஆலோசித்தோம் பின்பு அல்லாஹ்வுடைய கிருபையால் வந்த வழியை கண்டு பிடித்து இறங்கிவிட்டோம் , கீழே வந்து சேரும்போது மணி 18:15 , தண்ணீர் தாகம் , டிவிஎஸ் கிணற்றில் நன்றாக தண்ணீர் குடித்துவிட்டு நேராக LKS ஸ்வீட்ஸ் போய் ஆளுக்கு 2 கிளாஸ் ரசனா குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றோம் , நீர் கடுப்பால் அன்று இரவு அவதி, மறக்க முடியாத முதல் அனுபவம் , அதை தொடர்ந்து அடுத்த ஆண்டு மீண்டும் ஏறி இறங்கினோம் இந்த முறை கூட வந்தவர்கள் இஞ்சி ஜாபர், கரையான் என்ற ரசூல் , காதர் மற்றும் காட்டான் முஸ்தாக் , அப்பொழுதான் அடிக்கடி ஒரு சாமியார் விளக்கு ஏற்றுவார், அந்த விளக்கு ஒரு சின்ன மண் சட்ட்யில் எண்ணை மற்றும் கபன் துணி வைத்து உச்சியில் வைத்து இருந்தார் ஒரு அய்யா வழி கொடியும் பறந்து கொண்டு இருந்தது , (அதை என்ன செய்தோம் என்று கேட்காதீர்கள்) . முன்பு ஒரு காலத்தில் 3 வது தெருவில் இருந்து சிலர் அங்கு சென்று மரணம் அடைந்தாக கேள்விப்பட்டோம் அது உண்மையா என்பது தெரியவில்லை? இருந்தாலும் இப்போது நம்மிடம் இருக்கும் தொழில் நுட்ப வசதிகளை கொண்டு அங்கே சென்று வர ஆவல்....! ஆவல் நிறைவேறுமா...! இன் ஷா அல்லாஹ்...! ஊசி பொத்தை பற்றி சில தரவு உயரம் : 410 metre அல்லது 1350 அடி ...கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் உயரம் உச்சிக்கு பயணிக்கும் தூரம்: 1.5 கிலோமீட்டர் ஏறுவதற்கு சிறந்த காலம்; டிசம்பர் ஜனவரி
Mohammed Ghazzali1955 இல் மேல முஹல்லத்தை சார்ந்த ஒரு குரூப் மலை ஏற போயிருக்கு. மாலை நேரம் , முடியாமல் அனைவரும் இடை இடையே நின்று விட்டார்கள் இருவர் மட்டும் மேலே எறிவிட்டார்கலாம் நேரமோ இருட்டியும் விட்டது ஏறியவர்களை இறங்க காணோம் உடன் சென்றவர்கள்; வெகு நேரம் காத்து இருந்தும் வராததால் ஊருக்கு வந்து விளக்கு சகிதம் தேடியுள்ளார்கள் கண்டுபிடிக்க முடியவில்லை பிறகு மறுநாள் காலையில் திரும்பவும் போய் தேடும்போது அந்த இருவர் உடம்பும் இரண்டு இடங்களில் கண்டு எடுத்துள்ளார்கள். அன்று மதியம் மூன்று மணியளவில்தான் ஜனாஸாவை வீட்டுக்கு கொண்டு வந்தார்கள். இறங்கும் பொது இருட்டில் வழி தவறி கால் தவறி விழுந்து இருக்கலாம் என்பது உடன் சென்றவர்கள் வாக்குமூலம் . ஒன்னாவது தெரு கொண்டலப்பை சாகிப் என்பவரும் நாலாவது தெரு கம்பெனி வீட்டு முஹம்மது மொஹிதீன் என்பவரும் தான் அவர்கள் இருவரும் இணை பிரியாத தோழர்கள் .(ஏர்வாடி மெயன்ரோட்டில் அஜீஸ் சப்பல் உரிமையாளரின் சொந்த பெரியாப்பா ) இச்சம்பவம் நடக்கும்போது நான் பிறந்து இருக்க வில்லை என் தந்தை மூலம் தெரிந்து கொண்டது... M.s. Jawahar1974ல நாங்களும் முயற்சி பண்ணினோம் Emkeyem Mohideen"....முன்பு ஒரு காலத்தில், 3 வது தெரு......." உண்மைதான்.எனக்கு ஞாபமுள்ளவரையில்,' சென்றது 4 மாணவர்கள். பரிதாபகரமான முறையில் இறந்தது 2 பேர். மற்ற இருவரில் ஒருவர் இன்றும் உள்ளார். அதன் முழு விவரமும், எங்களில் சிலருக்குத் தெரியும் ஆனால், அவரின் அனுமதி இல்லாமல் அதைக் குறிப்பிடவிரும்பவில்லை. அடுத்த முறை ஊர் வ்ரும்பொழுது, அவரைச் சந்த்தித்து, அவர் விரும்பினால், மேலும் விவரம் கொடுக்கச் சொல்லுகிறேன். ஊரிலிருக்கும் என் நண்பர்களுக்கும் இது தெரியும். அவர்களிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி : முகநூல் Omar Salahudeen, பைத்துஸ்ஸலாம் ஏர்வாடி https://www.facebook.com/groups/baithussalam/permalink/663390893729631/
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |