Posted by Haja Mohideen
(Hajas) on 6/7/2014 6:55:49 AM
|
|||
நெல்லை ஏர்வாடி ஈமான் பொருளாதார விழிப்புணர்வு முகாம் by : Jahir Hussain 7 June 2014 நெல்லை ஏர்வாடி ஈமான் துபாயின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைடூரியம்! இன்று இவர்கள் நடத்திய நிகழ்ச்சியை இப்படி சொன்னால் மிகவும் பொருந்தும்!! பொருளாதார விழிப்புணர்வு முகாம் என்ற தலைப்பில் நடந்த இந்த நிகழ்ச்சி மிகவும் அருமையான இதுவரை நாம் சந்திக்காத ஒரு அணுகுமுறை! இந்த நிகழ்ச்சி வழக்கம் போல் கிராத் மற்றும் அதன் விளக்க உரையுடன் ஆரம்பமானது சகோதரர் இபுராஹீம் அவர்கள் ஈமான் பற்றிய ஒரு சிறு நினைவூட்டல் அதை தொடர்ந்து சகோதரர் அலியப்பா அவர்களின் ஒரு விழிப்புணர்வு பதிவாக்கம் அதில் நாம் எந்த நிலையில் உள்ளோம் அதன் லாப நஷ்டங்கள் என்ன என்பதை மிகவும் அருமையாக ஒளி ஒலி நிகழ்ச்சி. இதை தொடர்ந்து சகோதரர் பீர் அவர்களின் சிறு உரை & சிறப்பு பேச்சாளர் பற்றிய அறிமுக உரை அதை தொடர்ந்து சிறப்பு பேச்சாளர் ஜனாப் சம்சுதீன் (பிரவாசி பந்து வெல்பர் டிரஸ்ட்) அவர்கள் இந்த நிகழ்ச்சியை நடத்திய விதம் மிகவும் அருமை. நாம் இங்கு வந்ததன் நோக்கம் பொருளீட்ட அதை நாம் செயல்படுத்தும் விதம் அதனால் நாம் பெற்ற லாபம் பெற போகும் லாப நஷ்ட்டம் நம் முன்னோர்கள் பெற்ற நஷ்ட்டம் இவைகளை மிகவும் அருமையாக எடுத்துரைத்த விதம் அதே தவறை நாம் செய்யகூடாது என்பதில் அவர் காட்டி ஆர்வம் அதை எடுத்துரைத்தவிதம் இதுவரை நாம் இங்கொன்றும் அங்கொன்றுமா கண்டும் கேட்ட விசயங்களை மிகவும் கோர்வையாக எந்த வித தொய்வும் இல்லாமல் நம் கண்முன் படம்பிடித்து காட்டிய விதம் அருமை. பொருளாதாரத்தில் நம்மை நாம் எப்படி மேம்படுத்தி கொள்வது என்பது நாம் அடிக்கடி கேட்டவிசயம் தான் ஆனால் பின்பற்ற தவறும் விஷயம் "சேமிப்பு" & சேமித்த பணத்தை முதலீடு செய்யும் விதம் வருமானத்திற்கு அதிகாமாக நம்மை அறியாமலே நாம் பல விதங்களில் செலவு செய்வதை அருமையாக சுட்டிக்காட்டினார்கள் விளம்பரங்களால் நாம் நமது மனதை கட்டுபடுத்த தவறுவதையும். தேவையான பொருளை வாங்க போகும் போது அந்த தேவையான பொருளுடன் நமக்கு அப்போது தேவையில்லாத பொருட்களை இணைத்து வாங்கி சூப்பர் மார்க்கெட் வியாபார தந்திரத்தில் நாம் சிக்கி வீண்விரயத்தில் செய்வதில் ஈடுபடுவதையும் மிகவும் அருமையாக சொல்லி தவறுகளிலிருந்து நம்மை நாம் எப்படி பாதுகாப்பது என்பதையும் மிகவும் எளிதாக நம் கண்முன் கொண்டுவந்து காட்டினார், நாம் வேலை செய்யும் சூழல் தங்கியிருக்கும் இடத்தின் நிலைமை, நமது சாப்பாடு என்று எதையுமே நம் வீட்டாரிடம் சொல்லாமல் மறைக்கும் சூழ்நிலை தான் அவர்களை அங்கு ஊதாரிகலாக்குகிறது என்பது சொல்லி தவறு எங்கிருந்து ஆரம்பிகிறது என்பதுயும் சுட்டிக்காட்டினார் நாமும் சேமித்து நமது வீட்டாரையும் சேமிக்கும் பழகத்திற்கு ஆளாக்கவேண்டும் என்பதை பல உதாரணங்களுடன். இல்லையே வேலை இழந்து அல்லது கடைசி கால ஓய்வுக்கு பிறகு நமது முன்னோர்கள் பட்ட கஷ்டங்களை எடுத்துக்காட்டினார் சேமித்த பணத்தை முதாலீடு செய்யும் விதத்தையும் அந்தனால் வருமானம் நல்லதரும் முறையில் இருக்கவேண்டும் என்றும் கூறினார். நன்றி உரையுடன் கூட்டம் இனிதே முடிந்தது. எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே
Alimalick Peer Mohamedநானும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். Mohamed Mohideen Sஜனாப் அவர்களின் பல நிகழ்ச்சிகளின் பதிவுகளை கேட்டுள்ளேன். பயனுள்ளதாக இருந்தது. அதை போல் இந்த நிகழ்ச்சி மற்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கும். Jahir Hussainஉண்மை மொஹைதீன் காக்கா, அருமையான ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய விதம் அருமை . இது போன்ற ஒரு சில கண்சல்டிங் நிகழ்ச்சிகளில் பணம் கொடுத்து தான் கலந்து இருக்கிறேன் உண்மையிலே ஈமான் துபைக்கு தான் நன்றி சொல்லவேண்டும் ஈமானின் மாறுபட்ட சிந்தனை வாழ்க இது போன்ற நிகழ்ச்சிகள் ஊரில் நடத்த ஏற்பாடு செய்யலாம் ஊரில் உள்ள பெண்கள் அறியவேண்டிய பல உண்மைகள் இந்த நிகழ்ச்சியில் இருந்தது. Mohamed Mohideen SJahir Hussain இன்ஷா அல்லாஹ். ஜனாப் அவர்கள் மலையாளி நமது ஊருக்கு இவர்களின் பேச்சு சரியாகுமெனில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவர் கேரளாவில் பல ஊர்களில் பேசியுள்ளார்கள். Peer Mohamedவாழ்த்துக்கள் அணைத்து துபாய் Mohamed Ibrahimஅல்ஹம்துலில்லாஹ் Peer Mohamedமாஷா அல்லாஹ்! பயனுள்ள நல்ல பல தகவல்கள் கிடைக்கப் பெற்றோம், சகோ. சம்சுத்தீன் அவர்கள் இந்நிகழ்ச்சியை நடத்திய பாங்கு அனைவரையும் ஈர்த்திருக்கும் என்று நம்புகிறேன், வருகின்ற மாதத்திலிருந்து ஒவ்வொருவரும் தம்முடைய வருமானத்திலிருந்து 20% சேமிக்க ஆரம்பியுங்கள் என்று சொன்னதோடு மட்டுமில்லாமல், அவ்வாறு நான் சேமிப்பின் என்று அல்லாஹ்வின் பெயரால் உறுதி மொழியும் எடுக்கச் சொல்லி - இது போன்று நிகழ்ச்சியை அவர் நடத்திய விதமும் அற்புதம்! அல்லாஹு ரப்புல் ஆலமீன் - கேட்ட நல்ல விஷயங்களையெல்லாம் நம் வாழ்வில் நடைமுறை படுத்துபவனாக என்னையும், உங்களையும் ஆக்கியருள்வானாக! நன்றி : முகநூல் Jahir Hussain, பைத்துஸ்ஸலாம் ஏர்வாடி. https://www.facebook.com/groups/baithussalam/permalink/663200383748682/ https://www.facebook.com/media/set/?set=oa.663200723748648&type=1
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |