பெருமைப்படுகிறோம் நாங்களும் ஏர்வாடியில் உங்களோடு இருப்பதற்கு:-
ஜெனிவாவில்-ஐ.நா.வில்- ஏர்வாடி சகோதரனின் குரல் Matrix Jamal <jamalmatrix@hotmail.com>
நிச்சயமாக புகழ் அனைத்தும் என் அல்லாஹ் ஒருவனுக்கே ! அன்பிற்குரிய சகோதர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
கடந்த இரு வருடங்களாக ஆப்பிரிக்க கண்டங்களில் உள்ள LLDC’s (Landlocked Developing Countries) எனப்படும் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஆப்பிரிக்க நாடுகளை பற்றிய ஒரு ஆய்வு கட்டுரையை தயார் செய்து வந்தேன்.முழுமையான கட்டுரையை African Union (Organ of United Nations ) எனப்படும் ஒரு அமைப்பிடம் சமீபத்தில் submit செய்தேன் . அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்த சில திட்டங்களுக்காக ஐக்கிய நாடுகளின் சபையின் உலக வர்த்தக மாநாட்டு அமைப்பிடம் (UN-CTAD) இருந்து வரும் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு வந்துள்ளது. மேலும் ஜூலை ஒன்று முதல் மூன்று வரை நடைபெறும் சிறப்பு கூட்டத்தில் கலந்து என் ஆய்வு கட்டுரை தலைப்பில் (Brighten Africa) சிறிய உரை நிகழ்த்த வாய்ப்பும் வழங்க பட்டு இருக்கிறது . இந்த அமைப்பே ஆப்ரிக்காவில் வணிக பொருளாதார முன்னேற்றத்திற்காக பல நாடுகளுடன் இணைந்து பாடுபட்டு வருவது குறிப்பிட தக்கது .
இன்ஷா அல்லாஹ் வரும் ஞாயிறு அன்று காலை (29.06.2014) ஜெனீவா பயணமாக உள்ளேன். அல்லாஹ் , எனது பயணத்தை பயனுள்ளதாகவும் இந்த தொடர்புகள் நம்முடைய சமுதாயத்திற்கும் எல்லா வகையிலும் வருங்காலங்களில் பயனுள்ளதாக ஆக்குவதற்காக துஆ செய்யும் படி அன்புடன் கேட்டு கொள்கிறேன் .
அன்புடனும் சகோதரத்துவதுடனும்.. ஜமால்
ஏர்வாடி காரர்கள் எங்கும் தனித்து இயங்கினால் தானியங்கி துப்பாக்கிதான்
சேர்ந்து இயங்கினால்தான் சோர்ந்துபோய் விடுகிறார்கள்
வாழ்த்துகள் தம்பி ஜமால் வளர்பிறை போல் வளர ...
https://www.facebook.com/photo.php?fbid=580798258707335&set=gm.672317599503627&type=1
|