Posted by Mohamed Rafiq
(namaduoor) on 7/24/2014 4:30:33 PM
|
|||
களக்காடு, : நெல்லை அருகே நோயாளியை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளங்குளியை சேர்ந்தவர் ஆரீப் அகமது (42). களக்காடு நகர தமுமுக செயலாளர். மேலும் தமுமுகவின் ஆம்புலன்ஸ் டிரைவராகவும் பணிபுரிந்து வந்தார். களக்காடு பகுதியில் நிகழும் விபத்துகள் மற்றும் அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸில் சென்று பலரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்து பலர் உயிர் பிழைக்க உறுதுணையாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு களக்காடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவருக்கு உடல்நிலை மோச மானது. இதை யடுத்து, ஆரிப்அகமது அந்த நோயா ளியை ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டு நெல்லை மருத்துவமனைக்கு விரைந்து சென்று கொண்டிருந்தார். களக்காடு- நாங்குநேரி பிரதான சாலையில் களக்காடு மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது ஆரிப்புக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நெஞ்சுவலியால் அவதிப்பட்ட அவர் ஆம்புலன்சை ரோட்டு ஓரமாக நிறுத்தினார். பின்னர் வலியையும் பொருட்படுத்தாமல் உள்ளே இருந்த நோயாளியை காப்பாற்றுவதற்காக மற்றொரு ஆம்புலன்ஸ் டிரைவருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார்.இதையடுத்து, அவரது நண்பர்கள் மற்றொரு ஆம்புலன்சுடன் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் ஆரிப் அகமது இறந்து விட்டார். அதன்பின் நோயாளி, அந்த ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மாரடைப்பு ஏற்பட்டதும் டிரைவர் ஆரிப் ஆம்புலன்ஸ்சை ஓரமாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நோயாளிகளை உரிய நேரத்தில் மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று உயிர் பிழைக்க காரணமாக இருந்த ஆம்புலன்ஸ் டிரைவரின் பரிதாப முடிவு களக்காடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |