பாரத மக்கள் கட்சி, அட அது தான்யா இந்தியிலே பாரதிய ஜனதா பார்ற்றியைச் சேர்ந்த ஓராளுக்கு தங்கத் தமிழர்கள் குமரித் தமிழர்கள் வாக்குப் போட்டாங்களே. இவருக்கு வாக்குப் போட்டத்துக்கு பதிலாக தமிழர்களை வரிசையாக சுடுகாட்டில் படுக்க வைத்து வாய்க்கு அரிசிப் போட்டுருக்கலாம்.
ஏற்கனவே இந்தியக் கூட்டாட்சியில் தமிழன் படும் பாடு பெரும்பாடு. இதிலே இது மாதிரி கண்ட கஸ்மலம் ( அட ! சமஸ்கிருத வாரமாமே அதான் சமஸ்கிருதத்திலேய் திட்டினேனாக்கும் ).. எல்லாம் மிச்சம் சொச்சம் தமிழன் உசிரையும் வந்தவன் நின்றவன் பேண்டவன் என எல்லோருக்கும் விற்றுப்பிடும் போலிருக்கே.
இந்தியைத் திணிச்சாங்க, திராவிட விடுதலையை அழிச்சாங்க, தமிழ் மொழியை அழிக்க என்னென்னவோ செஞ்சு பார்த்தாங்க, தமிழ் நாட்டில் குட்டையை குழப்பி மீன் பிடிக்க நினைச்சாங்க. இதுக்கு என ஒரு பட்டி பார்ப்பனர், மலையாளி, அதுகளுக்கு கழுவி விட கொஞ்சம் தமிழ் கூட்டம் வேலை பார்க்குது. வேவு பார்க்குது.
சுனா சானா மத்திய அமைச்சரானதும் ராஜபக்ஷே வீட்டு நாய்க்குட்டியாட்டம் குழவி குழவி கொழும்பு பக்கமா வாலாட்டிட்டு அலையுது. கச்சதீவு எல்லாம் தமிழ்நாட்டுக்கு சொந்தமில்ல, அது சிங்களவனுக்கு என ஆணித்தரமா மத்தியில் இந்திவாலாக்கள் சொல்லியாச்சு. என்னத்துக்கு மீன் பிடிச்சிட்டு, இருக்கிற கடற்கரை எல்லாம் வைகுண்ட பெருமாளிடம் அடமானம் வச்சிட்டு அப்படியே கப்பல் ஏறி மாலை தீவு தாண்டி போயிடுங்க என சொல்லாம சொல்றாங்க.
இந்திய விடுதலை பெற்றது தொட்டு மத்திய அரசு தமிழகத்துக்கு செஞ்சது எல்லாமே பச்சத்துரோகம் தான். தமிழர்கள் பெரும்பான்மையா வாழ்ந்த சித்தூர், திருப்பதி, நகரி, கோலார், கொள்ளேகால், திருவனந்தபுரம், கொல்லம், பீர்மேடு, தேவிகுளம், பாலக்காடு - சித்தூர் என எல்லாவற்றையும் தெலுங்கு, கன்னடம், மலையாள தேசத்துக்கு தாரை வார்த்தார்கள். நல்லவேளை இலங்கையோடு தமிழகத்துக்கு நில எல்லை கிடையாது, அப்படி ஏதும் இருந்திருந்தா, திருச்சி, தஞ்சாவூர், ராமேஷ்வரத்தைக் கூட சிங்களவருக்கு கொடுத்திருப்பார்கள். அதிலயும் ஏன் குறை வைப்பானே என கச்சத்தீவையும் கொடுத்தார்கள். தமிழோடு நெருங்கிய தொடர்புடைய குடகு மொழி பேசுற பகுதி தமிழகத்தோடு தானே சேர்த்திருக்க வேண்டும். அதையும் கன்னடக் காரணக்கு கொடுத்தான்.
பாருங்கள் பெரியாறு அணை இருக்கிற பகுதியான பீர்மேடு கேரளாவுக்குப் போச்சு தண்ணீர் வரவில்லை. காவிரியாறு உருவாகும் குடகு கருநாடகத்துக்குப் போச்சு தண்ணீர் வரவில்லை, பாலாறு உருவாகும் சித்தூர் ஆந்திராவுக்குப் போச்சு, இல்லாத கடவுள் புண்ணியத்திலே அங்கே மழையே பெய்யாமல் தண்ணீர் வருவதில்லை. கச்சதீவையும், கடல் எல்லையையும் இலங்கைக்கு விட்டுக் கொடுத்தார்கள் மீன் பிடிக்கிறவன் வாழ்க்கை நாஸ்தியாச்சு. தண்ணீர் இல்லாததால் காவிரி படுகையும், வைகைப் படுகையும் காஞ்சு வறண்டு போச்சு. விட்டுருந்தா சென்னையைக் கூட ஆந்திராவுக்கு கொடுக்க ரெடியானாங்க, ஏதோ நம்மாளுங்க கொஞ்சம் முழிச்சிட்டதாலே மிஞ்சிச்சு.
அதுக்கப்புறம் இந்தியைத் திணிச்சாங்க, சாணியைக் கரைச்சு வாயில ஊற்றினாங்க, எல்லாவற்றையும் எதிர்த்து வெற்றி கண்டா, பார்ப்பனையும், பார்ப்பன அடிவருடிகளையும் திமுகவில் நுழைத்து ஒட்டு மொத்த திமுக-வின் சித்தாந்தமே நாறிப் போச்சு..
தமிழ் வளரக் கூடாது என தனியார் பள்ளிக்கு வழிவிட்டாங்க, இன்னைக்கு அது ஆங்கிலமா புளிச்ச ஏப்பமாய் நாற்றமடிக்குது. இருக்கிறது கூட பொறுக்கலை இந்த வக்கற்ற பயல்களுக்கு, குமரியையும் கேரளாவுக்கு கொடுப்பாராம் பொன்னர் ராதாகிருஷ்ணன் சொல்றாரு. கேட்டானா , மலையாளி குமரியை கேரளாவுக்குத் தா என கேட்டானா? இவராவே வேட்டியை அவுத்துக் கொடுப்பேன் என கோவணத்தோடு ஒத்தகைக் காலில் நிற்கிறாரு.
என்னத்த சொல்ல !!! இது தான் ஆட்டம் ஆரம்பம் ! இனி போகப் போகத் தான் இருக்கு ! பார"தீய" ஜனதாக்களின் அட்டகாசங்கள், அப்பப்பா !!!
http://www.kodangi.net/2014/09/blog-post.html