Posted by Haja Mohideen
(Hajas) on 9/20/2014 7:12:06 AM
|
|||
பிரதமர் மோடியின் அமெரிக்க விஜயம், நீ வரவில்லையா விசு?
எனக்கு இப்போது 48 வயது ஆகிவிட்டது. இதுவரை நான் இந்தியாவில் நடந்த எந்த தேர்தலிலும் வாக்களித்தது அல்ல. அட பாவி, நீ எல்லாம் ஒரு இந்தியனா என்று கேட்பதும் சரி தான். நான் 21 வயதில் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டேன். அதனால் தான். இதில் ஓர் நல்ல காரியம் என்னவென்றால் இத்தனை நாட்கள் இந்தியாவில் நடந்து வரும் ஊழல் நிறைந்த ஆட்சிக்கும், அட்டூழியதிர்க்கும் எனக்கும் சம்மதம் கிடையாது.
இப்படி என் வாழ்க்கை ஓடி கொண்டு இருக்கையில்... நியூ யார்க்கில் இருந்து நண்பன் ஒருவரின் தொலை பேசி. (நியூ யார்க் நகரம் நான் வசிக்கும் இடத்தில இருந்து 4,000 கிலோ மீட்டர் தொலைவு. விமானத்தில் சென்றால் 7 மணி நேரம், வண்டியில் சென்றால் கிட்ட தட்ட 2 நாட்கள் ஆகும்). தொலை பேசியில் பேசிய நண்பன் ஒரு பி ஜே பி அனுதாபி, பிரதமர் மோடியின் தீவிர ரசிகன்... இதோ அந்த உரையாடல்.
அட பாவி, முதலில் பிரதமர் மோடி என்று சொல்ல கற்று கொள். நீ எல்லாம் அவர் விசிறி. அதுவா விஷயம், கதைய மாற்றாதே...அவர் பேச்சை கேட்க்க நீ வரவில்லையா? இல்லை, மாப்பு. அவர் என்ன பேச போகின்றார் என்பது எனக்கு இப்பவே தெரியும், அதினால் அங்கே வருவது தேவையற்ற விஷயம். இந்த மதுரை குசும்பு தானே வேண்டாம் என்பது. என்ன விசு? உனக்கு மோதிய பிடிக்காதா? மாப்பு, மீண்டும் சொல்றேன், அவரை பிரதமர் மோடி என்று அழை. நம் இருவரிலேயே நான் தான் அவருக்கு மரியாதை அதிகமா தருகின்றேன், ஒரு வேளை உனக்கு அவரை பிடிக்காதா? விஷயத்திற்கு வா விசு. நீ ஏன் வரபோவது இல்லை. அமெரிக்காவிலே வெளிநாட்டு தலைவர் எவருக்கும் இதுவரை நடந்து இல்லாதது போல ஒரு மாபெரும் வரவேற்ப்பு நடக்க போகின்றது. சரியா சொன்னே, மாப்பு, அதுனால தான் நான் வரபோவது இல்லை. என்ன விசு, புரியலே. மாப்பு, இது ஒரு "சாப்பிட்டது பழைய சோறு, விளக்கெண்ணைய தடவி வாழை இலைய வெளியே போட்ட கதை"! அது என்ன விசு, வித்தியாசமா இருக்கு? ஒன்னும் இல்ல மாப்பு. வீட்டிலே ஒன்னும் இல்ல, சில்லின்டரும் இல்ல, பாத்திரமும் இல்ல, அரிசியும் இல்ல, பழைய சாதத்தில் தண்ணீர் ஊத்தி உப்பு போட்டு சாப்பிட்டு, ஒரு வாழை இலைய எண்ணை தடவி வெளிய போடுறது தான். பழைய சாதத்தை சாப்பிட்டது சரி விசு, ஆனால் ஏன் அந்த எண்ணை தடவிய இலைய வெளிய போடணும். அப்ப தானே மாப்பு நீயும் நானும் அண்ணன் உள்ள " நெய் போட்டு சாம்பார் சாதம் சாப்பிட்டு இருக்காருன்னு சொல்லுவோம்" விசு, மீண்டும் சொல்றேன்... மதுரை குசும்ப எப்ப விட போற? மதுரை குசும்ப நான் விட்டாலும் அது என்னை விடாது மாப்பு. சரி நீ ஏன் வர மாட்ட , அதை சொல்லு. எவ்வளவு பெரிய மகத்தான வெற்றி பெற்று வந்து இருக்காரு... மாப்பு, இது பிரதமர் மோடி அவர்கள் பெற்ற மகத்தான வெற்றி அல்ல. காங்கிரசின் அநியாயமான ஆட்ச்சிக்குகிடைத்த மகத்தான தோல்வி. சென்ற தேர்தலில் பி ஜே பிக்காக யார் நின்று இருந்தாலும் இந்த வெற்றி கிடைத்து இருக்கும். வெளி நாட்டில் இருக்கின்ற உனக்கு இது எப்படி தெரியும்? எதோ ஓர் உத்தேசம் தான், சரி, நான் சொல்றதை விடு. அந்த பெரியவர் அத்வானியும் அதே தானே சொல்லுறார். சரி, மோடி ஆட்சி அப்ப நல்லா இருக்காதுன்னு சொல்றியா? நான் அப்படி சொல்லுல? ஆனால் போற போக்கு சரி இல்லை. 100 நாள் தானே ஆச்சி விசு, அதுக்குள்ளே எப்படி.. முட்டாள், 100 நாட்களில் 100 வருடங்கள் நடந்த அநியாயத்த திருத்த முடியாதுன்னு எனக்கு தெரியும். ஆனால், 100 நாட்களில் நான் இத செய்வேன் - அதை கிழிப்பேன் என்று சொன்னார்களே, அதை ஏன் செய்ய வில்லை. என்ன கேள்வி கேட்டாலும்.. காங்கிரஸ்காரன் செய்யாததையா நாங்க செய்து விட்டான் என்ற ஒரே பதில். அவன் செய்த அநியாயத்திற்கு தானே அவனை உதைச்சி அனுப்பினாங்க. 100 நாட்களில் அப்படி என்ன செய்வோம்னு சொன்னாரு? 100 நாட்களில்.. ம்ம்.. கருப்பு பணம்.. வெளிநாட்டு வங்கியில் யார் பெயரில் இருக்கு? எவ்வளவு இருக்கு? எங்கே இருக்குன்னு சொல்லுவோம். அது மட்டும் இல்லாமல் அதை உடனடியாக இந்தியாவிற்கு எடுத்து வருவோம்னு கூவி கூவி சொன்னார். இப்ப என்னடானா அது பேச்சே காணோம். அது அவ்வளவு சுலபம் இல்ல விசு. டேய் முட்டாள், நான் கணக்கு பிள்ளை எனக்கே கணக்கு "சுலபமா - கடினமா"ன்னு கத்து தரியா? சுலபம் இல்ல தானே, அப்ப ஏன் சொல்லனும்? என்ன சொல்லுற?, விசு.. டேய், புரியாத மாதிரி நடிக்காதே. இப்ப நீ வரியா, இல்லையா? இதை ஒரு பெரிய வெற்றியாக நடத்த வேண்டும். அதை பத்தி கவலை படாதே மாப்பு, அது வெற்றிகரமா நடக்கும். எப்படி சொல்றே? டேய், இங்க அமெரிக்காவில் இருக்கிற இந்திய செல்வந்தர்களில் பாதி பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள். "இறால் போட்டு சுறா" பிடிப்பவர்கள். இவர்கள் எல்லாரும் சேர்ந்து நல்ல செலவு பண்ணி இதை வெற்றிகரகமாக நடத்துவார்கள். இது மட்டும் அல்லாமால் உன்னை போல் உள்ள தீவிர ரசிகர்கள் வேறு. ஆட்டம்-கூட்டம்-ஆடம்பரத்தில் இந்த நிகழ்ச்சியை அடித்து கொள்ள முடியாது. "போ... என்சாய் மாடி". என்ன இருந்தாலும் நீ வராதது கொஞ்சம் விசனம் தான் விசு. இப்படி பண்ணலாம் மாப்பு. பிரதமர் மோடி வந்துட்டு போகட்டும். 5 வருடம் கழித்து இவர் ஆட்சி எப்படி நடக்ககின்றது என்று பார்த்து விட்டு 2019 ல் வந்தார்ன்னா, நானும் ஒரு மாலை எடுத்து கொண்டு வருகின்றேன். அவரை பாராட்ட. ஏன் விசு.. நீ சொல்றத பார்த்தால் விடிவு காலமே இல்லையா? மாப்பு, பல்லாயிர கோடி கணக்கில் செலவு பண்ணி வந்த வெற்றி. இதை எல்லாம் செலவு பண்ணவர்கள் நாங்க எல்லாம் என்ன இளிச்ச வாயங்களா என்று புலம்பி கொண்டு இருக்காங்க. பிரதமர் மோடியே நல்லது செய்யவேண்டும் என்றாலும் இவர்கள் விட்டு விடுவார்களா? "பழைய குருடி கதவை திறடி"ன்னு ஆரம்பிச்சிடுவாங்க. என்னமோ, போ விசு. நல்ல மூடில் இருந்த என்னையும் குழப்பிட. அப்ப நானும் உன்னோட 2019 அவர் வந்தா பார்த்து கொள்றேன். எனக்கும் இப்ப கொஞ்சம் பிசி நேரம் தான். மாப்பு, போய் வேலைய பார். பிரதமர் மோதியின் நண்பன் அடானி. இப்ப இந்தியாவில் உள்ள பெரிய 10 பணக்காரகளில் 10வது இடத்தை பிடித்து விட்டாராம். இன்னும் 9 பேர் தான் பாக்கி (மாறன் சகோதர்களையும் சேர்த்து). அடுத்த 5 வருடத்தில் அவர் முதல் இடத்திற்கு வர வேண்டும் என்ற கொள்கையில் தீவிரமா இருக்காராம். அது எப்படி சாத்தியம் ஆகும்ன்னு அம்பானியும் டாட்டாவும் பிரதமர் மோதி ஆதரவாளர்கள் ஆகி விட்டார்களாம். என்ன சொல்ற, விசு. ஒன்னும் சொல்லுல. போ, போய் வேலைய பாரு. வெள்ளி கிழமை சம்பளம் வேணும் இல்ல. அப்ப இந்த மீட்டிங்.. டேய்.. அத நம்ப "படேல்" நண்பர்கள் பார்த்து கொள்வார்கள். சரி விசு.. மாப்பு, கடைசியா ஒரு கேள்வி..இவர் கூட நம்ப "கல்வி துறை - மனித விளம்பாது" மந்திரி ஸ்மிர்தி இராணி வராங்களா? அவங்க யாரு விசு? என்னடா இப்படி கேட்டுட? 1995ல் B.com முதல் வருடம். 1998ல் B.A இரண்டாம் வருடம் இப்ப 2008ல் Yale பல்கலை கழகத்தில் ஒரே வாரம் படித்து விட்டு "டிகிரி" வாங்கி வந்தாங்களே.. நம்ம மந்திரி... அவங்க வராங்களா? என்னது.. ஒரே வாரத்தில் டிகிரியா? ஒரு வாரத்தில் நமக்கு கும்பகோணம் டிகிரி காபி கூட கிடைக்காதே, இவங்களுக்கு எப்படி Yale பல்கலை கழக டிகிரி? அரசியலில் இது எல்லாம் சகஜம் மாப்பு. எப்படி வாங்கினாங்கன்னு எனக்கு தெரியாது. நம்ம சுப்பிரமணி சுவாமி கூட இப்ப அங்கே தான் இருக்காரு. அவர் வந்தார்னா அவரை கேளு. யார், யார் எங்கே எங்கே என்ன படிச்சாங்கன்னு கண்டு பிடிச்சு சொல்றதில் அவருக்கு நிகர் அவரே..
J.JeyaseelanSeptember 18, 2014 at 8:42 AM
நடப்பை அப்படியே சொல்லிவிட்டீர்கள் சார், அவர் வெறும் பேச்சாளர் என்பதை இந்தியா இன்னும் வெகு சீக்கிரம் உணர்ந்துகொள்ளத் தான் போகிறது...
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |