Mohamed Sharif @ லெப்பை வளவு - ஏர்வாடி அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). இறைவனின் மாபெரும் கிருபையால் லெப்பைவளவு ஜமாத், மற்றும் லெப்பைவளவு இளைஞர்கள் சார்பாக,விளையாட்டு போட்டி,மற்றும் லெப்பைவளவு "சகோதரத்துவ குரல் " (பாகம்-2) புத்தகம் வெளியீட்டு விழா, ஜமாத் தலைவர் ஜனாப் V.M.S சேக் அவர்கள் தலைமையில் இனிதே நடந்து முடிந்தது. (6th Oct, 2014)
ஏர்வாடி பேரூராட்சி தலைவர்,ஜனாப் . M.A ஆஸாத் அவர்கள்,மற்றும் பைத்துல் ஸலாம் பள்ளி முத்தவல்லி, ஜனாப். செய்யது சார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார்கள்.
ஏர்வாடி பேரூராட்சி தலைவர்,ஜனாப் . M.A ஆஸாத் அவர்கள் வழங்கிய வாழ்த்துரையில்,லெப்பைவளவு ஜமாத், மற்றும் லெப்பைவளவு இளைஞர்கள் செய்துவரும் நற்காரியங்களை, பாரட்டியதோடு அனைத்து ஜமாத்திலும் இது போன்ற நற்காரியங்கள் நடைபெற வேண்டும் என்று வாழ்த்தினார்.
Source: Facebook/
|