நீண்ட நாட்களுக்குப்பின் ஆற்றில் வெள்ள நீரைப் பார்ப்பவர்கள், வெள்ளத்தைப் பார்த்துக் கொண்டே தங்கள் கடந்த கால நினைவுகளை மீட்டிக் கொள்கிறார்கள்.
முதன் முறையாக நம்பியாற்றில் வெள்ளத்தைப் பார்க்கும் புதிய தலைமுறைகள், புருவங்களை உயர்த்தி ஆச்சரியத்தை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். செல்போன்களும், கேமராக்களும் ஆற்றை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.
இளசுகள் மண் சரிவுள்ள ஓரங்களில் நின்றவாறும், ஆங்காங்கு இருக்கும் பாலங்களிலும் தொங்கிய வண்ணமுமாக பெரியவர்களின் வார்த்தைகளை உதாசீனப்ப்டுத்தியவாறு ஆபத்தை உணராமல் தங்கள் புரொஃபைலுக்காக புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிறுவர்கள், பெரியவர்கள், தெருக்களின் ஓரங்களிலே நின்று வேடிக்கை பார்க்கும் பெண்கள் இப்படி இன்று ஆற்றை நோக்கும் கண்கள் ஆயிரமாயிரம்.
ஆனாலும் ஆற்றின் பழைய அழகு இப்போது இல்லை என்பதை பலரும் பேசிக்கொள்கின்றனர்.
ஆம்! உண்மைதான் எத்துணை அழகாக இருந்த நம் ஆறு மணல் கொள்ளையாலும், கழிவுநீர் கலப்பாலும், சீமை எனும் உடை மரங்களின் ஆதிக்கத்தாலும் இன்று அதன் உண்மை அழகை இழந்து நிற்கிறது. மக்களின் மனங்கள் மறந்துவிட்ட நம் ஆற்றின் நினைவுகளை இந்த மழை நினைவுப்டுத்தித் தந்துள்ளது.
நம்முடைய ஆற்றை பழைய நிலைக்கு மீட்ட முற்ச்சிப்போமா? அல்லது தண்ணீர் வற்றியவுடன் ஆற்றைப் பற்றிய நினைவுகளும் வற்றிவவர்களாக, எப்போதும் போலவே நாட்களை நகர்த்துவோமா?
-படங்கள் நண்பர்கள் பலரின் முகநூல் பதிவுகளிலிருந்து எடுத்தது. அனைவருக்கும் நன்றிகள்-
|