நமது நெல்லை ஏர்வாடி பஞ்சாயத்து நிர்வாகத்தின் தூய்மையான செயல்பாடு குறித்து தோழர் செந்தில் வேல் அவர்கள் தனது முகநூல் முகப்பில் எழுதியுள்ள வார்த்தைகள்.
நமது பேரூராட்சி நிர்வாகம் தொடர்ந்து நற்ச்சேவைகள் புரிய நல்வாழ்த்துக்கள்.
snthil Vel இசுலாமியர்கள் குறித்த எதிர்மறையான கருத்துக்கள் ஏராளமாகவே வருவது வாடிக்கையான ஒன்றுதான்..ஆனால் இசுலாமியர்கள் அதிகமாக வசிக்கும் தமிழக ஊராட்சிகளுள் ஒன்றான ஏர்வாடி குறித்த செய்தி நம்மில் பலரும் அறியாதது...ஊராட்சி, நகராட்சிப் பணிகளில் லஞ்சம் இல்லை என்று பலரும் சொல்லிக் கொண்டாலும் லஞ்சம் இன்றி எதுவும் நகராது என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே...ஆனால் இதற்கு முற்றிலும் விதிவிலக்காக முற்றிலும் லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்துகின்றனர் ஏர்வாடி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்...லஞ்சம் பெறுவது கடவுளுக்கு எதிரானது என்று கூறும் அவர்கள் இதுவரை லஞ்சம் ஏதும் இன்றி ஏர்வாடி ஊராட்சிக்குத் தேவையான பணிகளை நிறைவேற்றி வருகிறார்கள் என்பதை மீண்டும் மீண்டும் பல இடங்களில் உறுதி செய்து கொண்ட பிறகே இந்த பதிவை செய்கிறேன்...அந்த நண்பர்களின் பணி தொடர வாழ்த்துவோம்..
திரு செந்தில் வேல் அவர்களுக்கு நன்றிகள் .
புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே!
சகோ. செந்தில்வேல் அவர்களின் பாராட்டுகளுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு இத்தருணத்தில் ஒன்றை நினைவுப்படுத்தவும் கடமைப்பட்டவனாக இப்பின்னூட்டம்.
இப்பேரூராட்சி மன்றத்தின் தலைவர் பொறுப்பிற்காக, தலைவர் ஆஸாத் அவர்கள் மக்கள் மத்தியில் வாக்கு கேட்ட பொழுது "தமிழகத்தின் ஒரு தலைசிறந்த பேரூராட்சியாக, லஞ்ச லாவண்யமில்லாத, ஊழலற்ற, ஒரு முன் மாதிரி பேரூராட்சியாக ஆக்கி காட்டுவேன் என்று அன்று வாக்கு கேட்டார் - (அவரின் சார்பாக தெருத்தெருவாக இந்த வார்த்தையை பிரச்சாரத்தின் வாயிலாக முழங்கியவன் என்பதினால் இதை உரிமையோடே நினைவு கூர்கிறேன்) -
சொன்னதை செய்வோம், செய்வதை மட்டுமே அன்று சொன்னோம், என்பதற்கு எடுத்துக் காட்டாய், தான் இந்த மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை, இறைவனின் உதவியைக் கொண்டு இன்று நிலைநாட்டி வருகிறார் ஏர்வாடி பேரூராட்சி மன்றத்தின் தலைவர் மரியாதைக்குரிய ஆஸாத் (மாமா) அவர்கள். எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு மென்மேலும் அருள்புரிய இந்த நல்ல தருணத்தில் பிரார்த்தித்துக் கொள்வதோடு, இச்செயலில் அவருக்கு உறுதுணையாய்த் திகழும் அனைத்து வார்டு உறுப்பினர்களுக்கும், ஒத்துழைப்பு நல்கும் நிர்வாகத்தினருக்கும் நன்றி தெரிவிக்கவும் கடமைப் பட்டுள்ளோம்.
|