ஏர்வாடியில் நேற்று மாலை பொழிய ஆரம்பித்த மழை, விடாமல் கொட்டித் தீர்க்கிறது.
மழை மனிதர்களுக்கு இறைவன் வழங்கிய இணையற்ற அருட்கொடை. அருட்கொடைகளை வீணடிக்காது பயன்படுத்துவது நமது கடமை.
முடிந்த அளவுக்கு மழைநீரை சேமிப்பதற்கான வழிமுறைகளைக் கையாள்வோம்.
விண்ணிலிருந்து இறங்கும் மழை நீர்தான்- நாளை மண்ணிலிருந்து பிரவாகமெடுத்து நமது தாக்கத்தை தணிக்க வைக்கும். விளை நிலங்களை செழிக்க வைக்கும்.
மழைநீர் நம் உயிர் நீர் என்று என்னதான் அரசாங்கமும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் உணர்த்திக் கொண்டே இருந்தாலும், நாம் ஏனோ இன்னும் அதில் அலட்சியமாகவே இருக்கிறோம்.
மழை சரியாக பொழியாமல் பொய்பித்துப் போன நாட்களை நினைத்துப் பார்ப்போம். பல இடங்களில் நிலத்தடி நீர் குறைந்து போய் அதனால் ஏற்பட்ட சிரமங்களை எண்ணிப் பார்ப்போம். நாளையும் இது போன்ற நிலை உருவாகமல் இருக்க இன்றே உறுதி எடுப்போம்.
அலட்சியம் களைவோம்! இலட்சியம் கொள்வோம்!
குறிப்பு: தொடர் மழை காரணமாக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அப்படிப்பட்ட இடங்களில் உடனடியாக களமிறங்கி தேவையான உதவி ஒத்தாசைகளைக செய்வதற்கு ஆயத்தமாக இருப்போம்.
கவனிக்கப்பட வேண்டிய பகுதிகள்! களமிறங்கிய இளைஞர்கள்!
நமது ஊரைச் சார்ந்த பலர் தங்கள் முகநூல் பதிவுகளில் ல் சில பகுதிகளை படம்பிடித்துக் காட்டி, நடவடிக்கை கோரி வேண்டியிருந்தனர்.
இதோ அவற்றில் சில இடங்களில் இளைஞர்கள் தங்களால் முடிந்த சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு மட்டுமின்றி ஊரின் பல் இடங்களிலும் களமிறங்கி பணியாற்றி வரும் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
- புகைப்படங்கள் சில நண்பர்களின் பதிவிலிருந்து எடுத்தது. அவர்களுக்கும் நன்றி-
|