தெருக்களில் தேங்கி நிற்கும் மழைநீர், கழிவு நீரை அப்புறப்படுத்துதல்,
மரம், செடி, கொடிகளை நடுதல்,
விபத்து நேரங்களில் முன்னின்று உதவுதல்,
சமூக வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் இரத்த தானம் செய்தல்,
ஏழைகளை அரவணைத்தல், அவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகைகளை வழங்குதல்
"பைத்துல்மால்" எனும் பொதுநிதிக் கருவூலத்தை ஏற்படுத்தி வட்டியில்லாக் கடன் வழங்குதல்,
இலவச கல்வி உதவி, மருத்துவ உதவிகளை வழங்குதல்,
அரசு தொடர்பான ஆவணங்களைப் பெற்றுத்தர ஒத்தாசை புரிதல், அதற்கான படிவங்களைப் படிப்பறிவற்ற மக்களுக்கு பூர்த்தி செய்து தருதல்இப்படியாக இன்னும் பல சேவைகளில் ஈடுபடுவோர் எண்ணிக்கை நமது ஏர்வாடியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பாராட்டப்பட வேண்டிய, வரவேற்க்கப்பட வேண்டிய நல்ல வளர்ச்சியாகும். குறிப்பாக இளைஞர்கள் இது போன்ற சேவைகளில் முன்னின்று செயல்படுவது மிக மிக மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.
தேவையான நேரங்களில், தேவையான இடங்களில், தேவையான உதவிகளை உடனடியாக களமிறங்கி தங்களால் முடிந்த அளவுக்கு செய்துவிட்டு, பின்னர் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு அதை தெரியப்படுத்தி முறையாக அதற்கு நிரந்தரத் தீர்வு காணும் அவர்களின் அறிவார்ந்த அழகிய அணுகுமுறைகள் எதிர்காலம் குறித்த நல்ல நம்பிக்கையை நம்மில் விதைக்கிறது.