Posted by Mohamed Rafiq
(namaduoor) on 11/22/2014 3:15:51 AM
|
|||
களக்காடு, : களக்காடு பகுதியில் பெய்த கனமழையால் திருக்குறுங்குடி நம்பியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. களக்காடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதனால் திருக்குறுங்குடியில் பெய்த மழையினால் அங்குள்ள நம்பியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. நம்பி தலைவன் பட்டையத்தில் இருந்து தளவாய்புரம் செல்லும் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டூவீலர் மற்றும் சிறிய வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கியது. அப்பகுதியில் உள்ள பாலம் சிறியதாக இருப்பதால் மழைநேரங்களில் வெள்ளம் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். எனவே சிறிய பாலத்தை அகற்றிவிட்டு, புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். | |||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |