Posted by Haja Mohideen
(Hajas) on 11/29/2014 12:05:17 AM
|
|||
பழமை இன்பம்! ஏர்வாடியின் தெருக்கள் தோறும் கம்பீரமாய் காட்சி தந்த பழைய வீடுகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது. ...நெல்லை ஏர்வாடி அழகும் வளமும்
பழமை இன்பம்! ஏர்வாடியின் தெருக்கள் தோறும் கம்பீரமாய் காட்சி தந்த பழைய வீடுகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது. பழைய வீடுகளின் அமைப்பு. (ஏர்வாடியின் சொல் வழக்கில்) திண்ணை, தெருவூடு, கூடம் அல்லது அங்கனம், அறவூடு, அடுப்படி, முற்றம் இவைகள் தான் அன்றைய பழைய வீடுகள். ஓட்டு வீடாக இருந்தாலும், கட்டை குத்திய மாடி வீடாக இருந்தாலும பெரும்பாலும் தனித் தனி அறைகள் இருப்பதில்லை. தனிமையின் வாய்ப்புகள் மிகக் குறைவே! இதனால் எல்லோரும் எப்போதும் எல்லோரையும் பார்த்துக் கொள்கின்ற சூழல். ஒன்றாக அமர்ந்து சாயா குடிப்பதில் தொடங்கி, சாப்பிடுவது, பேசிக் கொள்வது என எப்போதுமே கலகலப்புக்கும் சில நேரங்களில் கலகத்துக்கும் பஞ்சமே இருக்காது. எவ்வளவு வெயில் அடித்தாலும் குளுமைத் தந்தது நம் கட்டைகுத்திய வீடுகள்.
ஆங்காங்கே இருந்த நூண்கள், கூட்டுக் குடும்பங்களால் குதூகலமாக இருந்தார்கள் சிறு சிறு உரசல்கள் வந்தாலும் மனதுக்குள் ஏதோ ஒரு இன்பம் இருந்து கொண்டே இருந்தது. வீட்டின் முகப்பில் இருந்த தின்னைகள், ஆனால் இன்றோ! குறிப்பாக வயதானவர்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுவிட்டது. திறந்தே இருக்கும் தின்னைகள் அழிக்கப்பட்டு, இன்றைய வீடுகளில் மகிழ்ச்சியே இல்லை என்பதற்கல்ல. இருக்கிறது.
https://www.facebook.com/groups/baithussalam/permalink/749830288419024/ https://www.facebook.com/permalink.php?story_fbid=403995053090709&id=386252861531595
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |