Posted by Haja Mohideen
(Hajas) on 12/17/2014 3:35:30 AM
|
|||
உங்கள் காலம் கடந்தும் உங்கள் நிலையான தர்மம் பலன்தர: ஒரு மனிதன் இறந்துவிட்டால் மூன்று செயல்களைத்தவிர மற்றவை அவனை விட்டு அறுந்துவிடுகின்றன. வசதி படைத்தவர்களாகிய நாம் வசதி இல்லாதவர்களுக்கு எந்த வகையில் உதவினாலும் அதன் மூலம் நாம் முழுமையான பலனை அனுபவிப்போம். நல்ல வற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கே. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2 : 272) 3666. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 2:272. (நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல; ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான்; இன்னும், நல்லதில் நீங்கள் எதைச் செலவிடினும், அது உங்களுக்கே நன்மை பயப்பதாகும்; அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள்; நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப் -படமாட்டீர்கள். 9:99. கிராமப்புறத்தவர்களில் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொள்பவர்களும் இருக்கின்றார்கள்; தாம் (தர்மத்திற்காகச்) செலவு செய்வது தங்களுக்கு அல்லாஹ்வின் நெருக்கத்தையும், இறை தூதரின் பிரார்த்தனையும் (தங்களுக்குப்) பெற்றுத்தரும் என நம்புகிறார்கள்; நிச்சயமாக அது அவர்களை (அல்லாஹ்வின்) அண்மையில் கொண்டு சேர்ப்பதுதான்; அதி சீக்கிரத்தில் அல்லாஹ் அவர்களைத் தன் ரஹ்மத்தில் (பேரருளில்) புகுத்துவான் - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான். 2:274. யார் தங்கள் பொருள்களை, (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும்; இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். https://www.facebook.com/groups/baithussalam/permalink/758868300848556/
பைத்துஸ்ஸலாம் "சமுக நலக்கூடம்" நல்ல முறையில் கட்டிமுடித்திட அல்லாஹ் அருள்புரிவானாக... பைத்துஸ்ஸலாம் முஹல்லாவாசிகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
பைதுஸ் ஸலாம் "சமுதாய கூடம்" அடிக்கல் நாட்டிற்கு கலந்துகொள்ள வந்த சகோதரர்கள் ..... பைதுஸ் ஸலாம் சமுதாய கூடம் அடிக்கல்லில் முதல் கல் :ஜனாப்.ஹாஜி சிட்டி கோல்ட் முஸ்தபா அவர்கள்,இரண்டாவது கல்:முத்தவல்லி ஜனாப்:ஹாஜி புஹாரி அவர்கள்,மூன்றாவது கல் :இமாம் ஹாஜா முஹைதீன் அவர்கள்,நான்காவது கல்:கேப்டன் ஜனாப்:மீரா சாஹிப் அவர்கள்,ஐந்தாவது கல் :மறைந்த கனி ஹாஜியார் அவர்கள் நினைவாக ஜனாப் பக்ருதீன் அவர்கள்.
https://www.facebook.com/groups/baithussalam/permalink/758842520851134/
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |