Posted by Haja Mohideen
(Hajas) on 12/18/2014 11:10:45 AM
|
|||
இயற்கை எழில் கொஞ்சும், ஏர்வாடியின் தெற்குப் பகுதியில் சிறுமளஞ்சி ரோட்டில் அமைந்திருக்கும் களத்துப் பள்ளிக்கூடம் என்று அழைக்கப்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஐந்து வயதில் குழந்தைகளைக் கூட்டி வருவார்கள் பெற்றோர்கள். அன்றைக்கு பள்ளியில் சேர்வதற்கான முதல் தகுதியாக இதுதான் இருந்தது. நீரால் சூழப்பட்ட தீவைப் போல,
ஊரில் விவசாயம் கொழித்த நாட்களில் இங்குதான் அறுவடை செய்யப்பட்ட கதிர்களைக் கொண்டு வந்து சூடு அடிப்பார்கள். பள்ளியின் உட்பகுதியில் வரிசையாக இருக்கும் பெரிய பெரிய வேப்பமரங்கள் அழகிய சூழலையும், இதமான காற்றையும் எப்போதும் தந்துகொண்டே இருக்கிறது.
அப்பகுதியில் உள்ள இளைஞர்களும், சிறுவர்களும் மாலை நேரங்களில் கூட்டம் கூட்டமாக விளையாடுவது அப்பகுதியையே கலகலப்பாக்குகிறது. இப்பள்ளியில் படித்த பலர், சுழலும் காலச் சக்கரம் கல்வியையும், கல்விக் கூடங்களையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது. பள்ளியைச் சுற்றிலும் இருந்த விளைநிலங்கள் வீடுகளாக மாற்றப்பட்டு பள்ளியின் அழகில் பாதி குறைந்து விட்டது. தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் அதிகரித்து, அரசு பள்ளியான களத்துப் பள்ளிக்கூடத்தின் கல்வியில் மக்களுக்கு கவனம் குறைந்து விட்டது.
பள்ளி என்பது கல்வி அறிவை வளர்க்கும் கலாசாலை என்ற நிலை மாறி, சுமார் இருபது வருடங்களுக்கு முன் இங்கு படித்த மாணவர்களின் சராசரி எண்ணிக்கையில் இன்றைய மாணவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் 20 சதவீதக்கும் குறைவே. அரசு பள்ளிகளின் தரம், தனியார் பள்ளிகளின் தரத்துக்கு தக்கவாறு என்று உயர்த்தப்படுமோ அன்றுதான் நமது களத்துப் பள்ளிக்கூடம் பழைய கலகலப்புக்குத் திரும்பும். காத்திருப்போம் நம்பிக்கையோடு..... https://www.facebook.com/jawbar.shathic/posts/765065550234030 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |