Posted by Haja Mohideen
(Hajas) on 12/26/2014 10:07:51 PM
|
|||
அவர் தேசபக்தர்... இவர் தேச விரோதி!!!
இந்திய விடுதலைப் போராட்டம் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருந்த சமயம், 1940களில் ஒரு வடமாநில இளைஞன் ஆங்கிலேய நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறான். சுதந்திரம் கேட்டுப் போராடினாயா" நீதிபதி கேட்கிறார். "இல்லை நான் போராடவில்லை...என்னை விட்டுவிடுங்கள் " என்று சொன்னவன் அத்தோடு நிற்கவில்லை.. இவர்கள்தான் போராடினார்கள் என்று போராளிகளையும் காட்டிக்கொடுக்கிறார்! அதே காலகட்டத்தில் தெற்கே தமிழகத்தில் விடுதலைப் போரில் பங்கேற்ற ஒரு இளைஞனை காவல்துறை கைது செய்கிறது! கோபத்தின் உச்சத்தில் அதிகாரி ஒருவன் அந்த இளைஞனின் மீசையை தன் கையிலிருந்த சிகெரெட்டால் சுட்டுக் கருக்குகிறான். அந்த இளைஞனின் நெஞ்சுறுதியை குலைக்க முடியவில்லை. நாடு விடுதலை அடைகிறது...! 50 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தமண்ணில் தேர்தல் நடக்கிறது. அன்று காட்டிக் கொடுத்த அந்த வடநாட்டு இளைஞன் இந்தியாவின் பிரதமர் ஆகிறார். சித்ரவதைகளை அனுபவித்து சிறைவாசம் கண்ட தமிழ்நாட்டு இளைஞன் ஒரு சாதாரண சின்னப் பையனிடம் தேர்தலில் தோற்றுப் போகிறான்! அந்த வடநாட்டு இளைஞன் வாழ்வின் எல்லா வசதிகளையும் அனுபவிக்கிறான். இவனோ, துறவி போல மக்கள் நல அரசியலை முன்னெடுத்துப் போராடுகிறான். அவன், ஒரு குறிப்பிட்ட வயதோடு அரசியல் போதும் என்று ஓய்வெடுத்துக் கொள்ளப் போகிறான். இவனோ, மரணிக்கும் வரையும் ஓய்வு கிடையாது என்று சொல்லி, மண்ணின் வளம் கொள்ளை போவதையும், நதிகளை மீட்கவும் காலம் பார்க்காமல் உழைக்கிறான்! 90 வயது முடியும் போது, ஓய்வில் இருக்கும் அந்த வடநாட்டு இளைஞனுக்கு "பாரத ரத்னா" விருது கிடைக்கிறது! இந்த தமிழ்நாட்டு இளைஞனுக்கு பிழைக்கத் தெரியாதவன் என்னும் பழிச்சொல் பரிசாகக் கிடைக்கிறது! இதுதான் இந்தியாவின் அரசியல்! தர்மம் வெல்லும்... உண்மை வெல்லும் என்று சொல்வதெல்லாம் நமது அரசியலுக்குப் பொருந்தாது என்கிற எண்ணமே மேலோங்குகிறது! 1924 டிசம்பர் 25ஆம் நாள் பிறந்தவர் அந்த வடநாட்டு இளைஞர். 1925 டிசம்பர் 25ஆம் நாள் பிறந்தவர் இந்தத் தென்னாட்டு இளைஞர். அவர் அடல் பிகாரி வாஜ்பேயி. அன்று அவர் தேசத் துரோகி, இவர் விடுதலைப் போராட்ட தியாகி. பாரத் மாதாகி ஜே!!! தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் ////தியாகங்களை மதிக்கத் தெரியாத தேசம் அல்லலுறும்... அழிந்து போகும்////// நன்றி சகோ Mariappan Sarawanan நெஞ்சை தொட்ட பதிவு. https://www.facebook.com/ameer.deen.357/posts/759336944142467 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |