Posted by S Peer Mohamed
(peer) on 1/2/2015 12:30:38 AM
|
|||
அமீரகம் ஈமான் ஏற்பாடு செய்த அமீரக ஏர்வாடி வாழ் சகோதரர்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி மற்றும் ஈமான் கிரிகெட் கிளப் இறுதி போட்டி - அல்ஐன் அமைப்பின் அறிவிப்புகள் மூலம் முன் பதிவு மூலம் தங்களை இணைத்துக்கொண்ட சகோதர்கள் காலை 9 மணி அளவில் ஜப்லியா மெட்ரோ ஸ்டேஷன் அருகிலிருந்து புறப்பட்டு நண்பகல் 12 மணியளவில் அல்ஐன் சென்று சேர்ந்தனர். அங்கு எற்பாடு செய்யப்பட்டு இருந்து சிற்றுண்டியை முடித்துவிட்டு பார்வையாளர்களின் முன்னிலையில் கிரிகெட் இறுதி போட்டி ஆரம்பானது மதியம் 2:30 மணியளவில் அருகில் இருந்த பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மதிய விருந்தில் அனைவரும் கலந்து கொண்டு போதுமான அளவு உணவு நல்ல ஒரு ஓய்வு எடுத்துவிட்டு மாலை 5:20 மணியளவில் அல்ஐனிலிருந்து புறப்பட்டு 7:30 மணியளவில் துபாய் வந்து சேர்ந்தோம். ஊரைவிட்டு பல ஆயிரம் மையில்களுக்கு அப்பால் அமீரகத்தில் ஒவ்வொரு பகுதியில் வேலை செய்துகொண்டிருக்கும் எங்களை ஒரே இடத்தில் கூடி சகோதரத்துவத்தை மேலும் வலுபடுத்தவும் விடுமுறை சந்தோசத்தை பகிர்ந்து கொள்ளவும் மனம்விட்டு பேசி மகிழவும் இத்தகைய அருமையான ஒரு ஏற்பாடு செய்து தந்த ஏர்வாடி துபாய் ஈமான் அமைப்பின் நிர்வாகிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.... இத்தகைய நல்ல உள்ளம் கொண்ட நம் சகோதரர்களின் மீதும் அவர்களின் கும்பத்தார் மீதும் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் கருணையும் என்றெண்டும் நிலவட்டுமாக ஆமீன் குறிப்பு : இந்த நிகழ்ச்சிக்கு ஈமானின் நிதியிலிருந்து எந்த பொருளாதாரமும் உபயோகபடுத்தபடவில்லை |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |