Posted by Haja Mohideen
(Hajas) on 1/7/2015 9:09:30 PM
|
|||
விழிப்புணர்வு முகாம்!
"விழிப்புணர்வுடன் வாழும் வாழ்க்கையே எப்போதும் பாதுகாப்பானது" ஏர்வாடி பேரூராட்சி மன்றத்தின் சார்பாக அரசு ஆண்கள் பள்ளி மாணவர்களுக்கு புகையில்லா பொங்கல் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று (07/01/2015) பேரூராட்சி மன்றத் தலைவர், இன்று இந்த பூமி சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு மூல காரணமே போதிய விழிப்புணர்வு இல்லாதது தான் என்பது மறுக்க முடியாத விஷயம். அதிலும் குறிப்பாக தூய்மை, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வின் தேவை இப்போது நமது ஊருக்கு மிக மிக அவசியமானது. இதனால் நாம் இழந்தவைகளும், இழந்து கொண்டிருப்பவைகளும் மிக ஏராளம். மாணவர்களிடம் முன்வைக்கும் விழிப்புணர்வு பிரச்சாரம் வரவேற்கப்பட வேண்டியது, பாராட்டப்பட வேண்டியது. சுற்றுச்சூழல், சுகாதாரம், தூய்மை இவைகள் குறித்து என்னதான் மக்களிடம் அரசும், அரசு சார்ந்தவர்களும், சமூக ஆர்வளர்களும் மாய்ந்து மாய்ந்து சொன்னாலும் மிகச் சிலரைத் தவிர பெரும்பான்மையோர் அவற்றுக்கு செவி சாய்ப்பதே இல்லை. அதே விஷயத்தை பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனோ, மாணவியோ தங்கள் பெற்றோர்களிடம், அந்த வாய்ப்பை இது போன்ற மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம்கள் தான் அமைத்துக் கொடுக்கும். பேரூராட்சி மன்றத் தலைவரின் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், முகாமில் அரசு ஆண்கள் பள்ளி மாணவர்களும், பேரூராட்சி மன்ற ஊழியர்களும் கலந்து கொண்டணர். முகாமில் மாணவர்களுக்கு மத்தியில் உரையாற்றிய பேரூராட்சி தலைவர் திரு. M.A ஆசாத் அவர்கள் உட்பட பலரும் புகையில்லா பொங்கல், குப்பையில்லா நகரம் போன்ற விஷயங்களை முன் வைத்து உரையாற்றினார்கள். அனைவருக்கும் நமது நன்றிகளும், பாராட்டுக்களும்....... ..... https://www.facebook.com/permalink.php?story_fbid=427711057385775&id=386252861531595 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |