Posted by Haja Mohideen
(Hajas) on 1/8/2015 8:58:34 PM
|
|||
நேற்று ப்ரான்சில் பாரீஸில் உள்ள 'சார்லி ஹெப்டோ' பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டு 12 பேர் கொல்லப்பட்டது ப்ரெஞ்ச் மக்களிடம் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சில ப்ரெஞ்ச் பத்திரிக்கைகள், 'பயங்கரவாதிகளால் 12 பேர்கள் படுகொலை செய்யப்பட்டனர்' என்று செய்திகள் வெளியிட்டுள்ளன. பெரும்பான்மையான ப்ரெஞ்ச் பத்திரிகைகள், 'இஸ்லாம் தீவிரவாதி'களால் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியிடுகின்றன. அதற்கு கூறும் காரணம் சமீபத்தில் நபிகள் படத்தை வரைந்ததற்காக அந்த பத்திரிக்கை மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது மட்டுமே. வேறு சாட்சிகளோ ஆதாரங்களோ எந்த தகவல்களும் இல்லாத நிலையில் பயங்கரவாதிகள் தாக்குதல்களை 'இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்'களாக மாற்றும் வெறுப்புவாத /மதவாத அரசியலை முன்நிறுத்துவதும், கருத்து சுதந்திரத்தை முன்னிருத்தி இச்சம்பவத்தை பத்திரிக்கை துறையினருக்கு ஆதரவாய் பேச முற்படும் அபத்தத்தை பொதுப்புத்தியில் செய்ய முற்படுவதும் தவறு. ப்ரெஞ்ச் நாட்டு வேலையில்லா திண்டாட்டமும், ப்ரெஞ்ச் இனவாத ஆதரவு அதிகரிப்புகளும், சமகால இடதுசாரி அரசு மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியும், ஐரோப்பிய ஒன்றிணைவு சார்புகளால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியையும் திசை திருப்பும் ஒரு சம்பவமாய் இது மாற்றப்பட்டிருக்கிறது. கடந்த ஒரு வார காலமாக மக்கள் தொடர்புள்ள ஊடக துறைகளிலும் தொலைக்காட்சிகளிலும் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த ப்ரெஞ்ச் நாட்டு நடப்பு பிரச்சினைகள் அனைத்தையும் மறக்க வைத்த இச்சம்பவத்திற்கு அத்தனை வெறியேற்றப்பட்டிருப்பதற்கு காரணம் இஸ்லாமிய எதிர்ப்பு மதவாத நிலை. சென்ற வாரம் ஜெர்மனியில் இஸ்லாமியர்களை வெளியேற்றக்கோரி நடைப்பெற்ற பெரும் ஆர்ப்பாட்ட ஜெர்மானிய மனநிலையில் எப்படி இனவாத வெறியேற்றப்பட்டுள்ளதோ அத்துனை இனவாத நிலை ப்ரெஞ்ச் இனவாதத்திற்கு இருக்கக் கூடாதா? இருக்கும்பட்சத்தில் நடைப்பெற்ற பத்திரிக்கை மீதான தாக்குதல்களுக்கு இஸ்லாமியர்கள் மீது திசை திருப்ப நடைப்பெற்ற திட்டமிட்ட அரசியல் தாக்குதல் என்பதா? இனவாத தாக்குதல் என்பதா? என்பதைத்தான் ஆராய வேண்டுமே தவிர பத்திரிக்கையின் கருத்துச் சுதந்திரத்தை இல்லை. ஏனெனில், உலகில் உள்ள எந்த பத்திரிக்கைகளும் மக்களுக்காக செயல்படுவதில்லை. ஆளும் அதிகாரத்திற்காகவும் முதலாளித்துவத்துக்காகவும் எலும்புத் துண்டுகளை கவ்வும் நாக்கிடம் நேர்மை நியாயம் யோக்கியதை குறித்து பாடமெடுத்தால் அது உன் குரல்வளையையும் கவ்விவிடும். அமெரிக்க - ஐரோப்பிய உலக அரசியலைத் தெரிந்தவன் இந்த பம்மாத்து அரசு இயந்திரங்களுக்காக வக்காலத்து வாங்கமாட்டான். 'பத்திரிக்கை கருத்துச் சுதந்திரம்' என்று உளறமாட்டான். இச்சம்பவங்களுக்கு காரணமான 'உள்அரசியலை' மக்களிடம் அம்பலப்படுத்த முயற்சி எடுப்பான். - தமிழச்சி
https://www.facebook.com/tamizachi.Author/posts/728146053950620 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |