Posted by Haja Mohideen
(Hajas) on 1/21/2015 7:44:44 AM
|
|||
சினிமா பார்ப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை… உங்களையும் ஒரு கேமிரா விடியோ எடுக்கிறது!January 7, 2015
சென்னையில் ஷாப்பிங் மால் ஒன்றில் அமைந்திருக்கும் மல்ட்டிபிளக்ஸ் திரையரங்கத்திற்கு செய்தியாளர் ஒருவர் - அதன் உரிமையாளரைச் சந்திப்பதற்காகச் சென்றிருக்கிறார். திரையரங்க உரிமையாளர் வெளியில் இருந்ததால், நண்பரை அவரது அலுவலகத்தில் உட்கார வைத்திருக்கின்றனர் அங்கிருந்த ஊழியர்கள். உரிமையாளரின் அந்த அறையில், உள்ள சிறிய திரைகளில் ( மானிடர் ) தியேட்டரில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் தெரிந்திருக்கிறது. நுழைவு வாயில், டிக்கெட் கவுண்டர், கேண்டீன், என்று வரிசையாகப் பார்த்துக் கொண்டிருந்த நண்பருக்கு ஒரு மானிடரைப் பார்த்ததும் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது….! காரணம், திரையரங்கினுள் அமர்ந்து படம் பார்ப்பவர்களும் அதில் தெரிந்திருக்கிறார்கள். அந்த நேரம் உரிமையாளர் அலுவலகத்துக்குள் வரவே, அதைப் பற்றி அவரிடம் நேரடியாகவே கேட்டிருக்கிறார் அந்த நண்பர். ” படம் பார்க்க வருபவர்கள் சில சமயங்களில் ஸ்கிரீன், இருக்கை போன்றவற்றைக் கிழித்து விடுகிறார்கள். செல்போனில் படக்காட்சிகளை வீடியோ எடுத்து விடுகிறார்கள்.. இதனால் பாதுகாப்புக்காக திரையரங்குக்குள்ளும் கண்காணிப்பு கேமரா பொருத்தியிருக்கிறோம் ” என்று கூறி இருக்கிறார் தியேட்டர் உரிமையாளர். “அப்போ, சில்மிஷங்களும் நிறைய நடக்குமே…’ என்று அந்த நண்பர் கேட்க, திரையரங்கினுள் இருந்த ஒரு கேமரா காட்சியை பெரிதாக்கிக் காட்டியிருக்கிறார். அதில், இரண்டு பேர் முத்தமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்து நண்பர் அதிர்ச்சியடைய – “இதையெல்லாம் நாங்கள் தவறாகப் பயன்படுத்த மாட்டோம். பாதுகாப்புக்காக மட்டுமே கேமரா பொருத்தியிருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார் திரையரங்க உரிமையாளர். சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருக்கும் பெரும்பாலான திரையரங்குகளின் உள்ளே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது…..!! நாம் படம் பார்ப்பதையே, நமக்குத் தெரியாமல் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்…..!!! நம் ஊர்களில், பொதுவாக – பூங்காக்கள், கடற்கரை மற்றும் திரையரங்கங்கள் ஆகியவையே பெரும்பான்மையான காதலர்களுக்கு சந்திப்பு இடங்களாகப் இருக்கின்றன. அதிலும், கொஞ்சம் அப்படி இப்படி இருப்பவர்கள், திரையரங்குகளைத்தான் தேடிச் செல்கிறார்கள். புதிதாகத் திருமணமான இளம் பருவத்தினரும் கூட தனிமையைத் தேடி திரையரங்குகளுக்கு வருகிறார்கள். பல சமயங்களில், இருட்டு தானே என்று கொஞ்சம் நெருக்கமாகவும் இருக்கிறார்கள். ஆனால், அவர்களின் செயல்களை எல்லாம் – அவர்களுக்குத் தெரியாமலே எங்கோ உட்கார்ந்து கொண்டு யாரோ பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிய வந்தால் இந்த செய்தியைப் படிக்கும்போது இன்னொரு அதிர்ச்சியான சந்தேகமும் வருகிறது. ஒருவேளை பெண்களுக்கான பாத்ரூம்களிலும் காமிராக்கள் இருந்தால் …..? இவற்றை யார், எப்படி உறுதி செய்வது …? பொதுவாக – குற்றங்கள் நிகழாமல் தடுக்கவும், ஒருவேளை குற்றங்கள் நிகழ்ந்தால், குற்றவாளிகளைப்பற்றிய தடயங்கள், தகவல்களைப் பெறவும் கண்காணிப்பு காமிராக்கள் ஆனால், அதே சமயம், இந்த மாதிரி திரையரங்குகள் போன்ற இடங்களில் – எந்தெந்த இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று தீர்மானிப்பதில் இப்போதெல்லாம், தியேட்டருக்குள் நுழையும் முன்னரே, முழுவதும் பரிசோதனை செய்த பிறகு தான் உள்ளே அனுமதிக்கிறார்கள். பின்னர், கேண்டீனிலும், வராந்தாவிலும் கூட காமிராக்கள் இருப்பது சரியே…. ஆனால், இதன் பின்னர், அரங்கத்தின் உள்ளேயும், படம் பார்க்கும் மக்களை கண்காணிப்பது அவசியமா …? சீட்டைக் கிழிக்கிறார்கள், செல்போனில் வீடியோ எடுக்கிறார்கள் என்பதெல்லாம் தகுதியான காரணங்களாகத் தோன்றவில்லை. பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். அதே சமயம் தனிப்பட்ட நபர்களின் உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும். -காவிரி மைந்தன்\ http://www.tamiltelegram.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/ |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |